முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
126

பரப

பரப்பர் அல்லீரோ! அவர்கள்பக்கல் ஏறப்போம் என்ன, ஆனால், அங்குப்போகும் வழியும், போனால் செய்யும் படிகளும் எல்லாம் கேட்டுப் போகவேணுமே. 1இனித்தான், சீடர்களுக்கு அன்றோ ஒன்று சொல்லுவதும். 2“சாஷ்டாங்க நமஸ்காரத்தினாலும் செவ்விதின் கேட்பதனாலும் ஆசாரிய சேவையினாலும் உபதேசிப்பார்கள் என்று அறிந்து கொள்” என்பதே அன்றோ கேட்பார்படி. ஆனபின்பு, நாலடி கிட்ட நின்று கேட்கவேணும் என்று, திரளிலே வந்து புகுரப் புக்கான். கழகம் ஏறேல் நம்பீ - அவர்கள் முன்னம் ஆனார் ஆகிடுக; 3ஏறிட்டுக் கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ? நீர் முன்னம் எங்கள் ஓலக்கத்தில் புகுராதே கொள்ளும்.

    4
இவ்விடத்தே, பட்டர் அருளிச்செய்வது ஒரு வார்த்தை உண்டு. அதாவது, “சமஸ்த கல்யாண குணத்மகனாய் உபய விபூதியுக்தனாய் சர்வாதிகனாய் சர்வ நியந்தாவாயிருக்கிற சர்வேசுவரன் நான்கு இடைப்பெண்கள் இருந்த இடத்தே புக்கு அல்லது நிற்கமாட்டாத செல்லாமை விளைய, அவர்கள் ‘நீ இங்குப் புகுராதேகொள்’ என்ன, விலங்கு இட்டாற்போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றான் என்கிற சௌசீல்யம் யார் அறிந்து கொண்டாட வியாசர்

 

1. தூர இருந்து கேட்க ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘இனித்தான்’ என்று தொடங்கி.

2. சீடன் ஆனால் அண்மையில் வேண்டுமோ? என்ன, ‘சாஷ்டாங்க
  நமஸ்காரத்தினாலும்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.


  “தத் வித்தி ப்ரணிபாதேந ப்ரச்நேந ஸேவயா
   உபதேஷ்யந்தி தே ஞானம் ஞாநிந: தத்வதர்ஸித:”

  என்பது, ஸ்ரீ கீதை, 4 : 34.

3. ‘ஏறிட்டுக்கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ?’ என்றது, இதற்கு முன்பு
  இல்லாத ஆசார்ய பதத்தை ஏறிட்டுக்கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ
  என்னுதல். அன்றிக்கே, போம் வழியும் போனால் செய்யும்படிகளும்
  சொல்லுமதனை ஏறிட்டுக்கொள்ளுதல் எங்களுக்குப் பரமோ என்னுதல்.

4. இவர்கள், “கழகம் ஏறேல்” என்றவாறே, அவன் செயல் அற்றவனாய்
  நின்றபடியை அநுசந்தித்துப் பட்டர் ஈடுபட்டபடியைக் காட்டுகிறார்
  ‘இவ்விடத்தே பட்டர்’ என்று தொடங்கி. சர்வநியந்தா - எல்லாரையும்
  நியமிக்கிறவன். “ஆய்ச்சியோம்” என்றதனைத் திருவுள்ளம் பற்றி ‘நான்கு
  இடைப்பெண்கள்’ என்கிறார். ‘வியாசர் முதலாயினோர்’ என்றது,
  கிருஷ்ணனுடைய கல்யாணகுணங்களில் ஈடுபட்டவர்கள் ஆகையாலே.
  ‘முதலாயினோர்’ என்றதனால், ஆழ்வார்களைக் கொள்க.