New Page 1
முதலாயினோர்
எழுதியிட்டு வைத்துப் போனார்களோ?” என்பது. 1‘எல்லாரையும் நியமிக்கிற சர்வேசுவரன்
சிலரால் நியமிக்கலாம்படி எளியனானான்’ என்றால், ‘இது மெய்’ என்று கைக் கொள்ளுவாரைக்
காணமுடியாதன்றோ. 2சாஸ்திரங்கள் எல்லாம் நியமிக்கிறவன், நியமிக்கப்படுகிறவர்கள்
என்று பாகுபடுத்தி ஒருங்கவிடா நிற்க, 3அத்தலை இத்தலையாகச் சொல்லுகிறதன்றோ
இது.
4‘சாது கோட்டியுள் கொள்ளப்படுவார்’ என்று சொல்லுவது, 5வைஷ்ணவர்களுடைய
திரளிலே ஒருவன் வந்து புகுந்தால் செருக்காலே மலையிட்டு அமுக்கினாற் போலே இருக்கை அன்றிக்கே,
நீரும் நீரும் கலந்தாற் போலே இவன் புகுந்தமை தெரியாதபடி இருந்து, அவர்கள் இடம் கொடுத்து
அவர்கள் ஏற்றுக்கொள்ள இருத்தல் அன்றோ ஒருவனுக்கு நன்மையாவது. இது, இவர்களுக்கே அன்றியே,
அவனுக்கும் ஒத்திருக்கிறபடி; 6“அந்த இராமனும் மற்றவர்களோடு கூட இருந்து அநுபவிக்கவேண்டும்
என்னும் விருப்பத்தால் மெதுவாகச் சபையை அடைந்தவனாய்க் குசலவர்களின் கானத்தைக்
1. ‘ஆர் அறிந்து கொண்டாட’
என்பான் என்? கொண்டாடுவார் இலரோ?
என்ன, ‘எல்லாரையும்’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
2. சாஸ்திரம் சொன்னால் மெய் என்று கொள்ளலாமே? என்ன, ‘சாஸ்திரங்கள்
எல்லாம்’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச் செய்கிறார்.
3. ‘அத்தலைஇத்தலையாகச் சொல்லுகிறது’ என்றது, நியமிக்கிறவன்
நியமிக்கப்படுகின்றவர்கள்
என்னும் தன்மை மாறாடி அவன் நியமிக்கப்
படுகின்றவனாயும் இவர்கள் நியமிக்கின்றவர்களாகவும்
சொல்லப்படுகிற
தன்றோ என்றபடி.
4. “கழகம் ஏறேல்” என்கையாலே, ஸ்ரீ வைஷ்ணவ கோஷ்டியில் சேர்தல்,
அடியார்களுக்கே யன்றி எம்பெருமானுக்கும்
உத்தேசியம் என்கிறார் ‘சாது
கோட்டியுள்’ என்று தொடங்கி. ‘சாது கோட்டியுள்’ என்ற பாசுரப்
பகுதி,
பெரியாழ்வார் திருமொழி, 3. 6 : 11.
5. பாசுரத்தில் “உட்கொள்ள” என்றிருப்பதற்கு, பாவம் அருளிச் செய்கிறார்
‘வைஷ்ணவர்களுடைய’
என்று தொடங்கி. ‘செருக்காலே’ என்றது,
வருகின்றவனுடைய செருக்காலே என்றபடி. அவனுக்கும் -
எம்பெருமானுக்கும்.
6. அவனுக்கும் ஒத்திருக்குமாற்றைக் காட்டுகிறார் ‘அந்த இராமனும்’ என்று
தொடங்கி.
“தத:து தௌ ராமவச: ப்ரசோதிதௌ
அகாயதாம் மார்க விதாந ஸம்பதா
ஸ சாபி ராம: பரிஷத்கத: ஸநை:
புபூஷயா ஸக்த மநா பபூவ”
என்பது,
ஸ்ரீராமா. பால. 4 : 31.
|