570
570.
கன்மமன்றுஎங்கள்
கையில் பாவை பறிப்பதுகடல்ஞாலம் உண்டிட்ட
நின்மலா!
நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே
சொல்லிஎம்மை நீவிளையாடுதி; அதுகேட்கில்என்னைமார்
தன்மம்
பாவம் என்னார்; ஒருநான்று தடிபிணக்கே.
பொ-ரை :-
பிரளய
வெள்ளத்தில் அழுந்துகிற உலகத்தைப் புசித்துக் காப்பாற்றிய குற்றமற்றவனே! நெடியவனே! எங்கள்
கையிலேயுள்ள பாவையைப் பறிப்பது செய்யத்தக்க காரியம் அன்று; இப்படிப்பட்ட உனக்கும் குற்றம்
குற்றமேயாகும்; எம்மைப் பார்த்து மர்மமான வார்த்தைகளைச் சொல்லி நீ விளையாடுகின்றாய்;
அதனைக் கேட்கில், எங்களுடைய தமையன்மார்கள் தர்மம் பாவம் என்று நினையார்கள்; ஒரு நாள்
தடியைக் கொண்டு மாறுபடுவர்.
வி-கு :- கர்மம் வர்மம் தர்மம் என்பன, கன்மம் வன்மம் தன்மம் எனத் திரிந்து வந்தன.
பாவை - விளையாடுதற்குரிய பொம்மை. என்னை மார் - தமப்பன், தமையன்மார்கள். நான்று - காலம்.
ஈடு :- ஏழாம்பாட்டு. 1ஸ்ரீபரதாழ்வான் எல்லா உபாயங்களையும் அநுஷ்டித்துத்
தன்பக்கல் பட்டன எல்லாம் தான் இவர்கள் பக்கலிலே பட்டான். 2“ஸ்ரீராமபிரான் திரும்புவதற்கு
எல்லாவிதமான உபாயங்களையும் மேற்கொள்ளப் போகின்றேன்” என்று மீட்கையிலே போரவருந்தினான்
அன்றோ. 3தாமே இரங்கி மீளும்படி செய்கிறேன், அது தான் கேட்டார் வாய்க் கேட்கவேண்டுமோ?
“எவ்வளவு வரையில் அவர் என்னிடம் இரங்கவில்லையோ அவ் வளவு வரையிலும் பர்ண
1. “கன்மம் அன்று எங்கள்
கையில் பாவை பறிப்பது” என்றதிலே நோக்காக
அவதாரிகை அருளிச்செய்கிறார். ‘எல்லா உபாயங்களையும்’
என்றது,
தாய்மாரைக் கொண்டும், வசிஷ்டர் முதலாயினோர்களைக் கொண்டும்
சொல்லச் செய்தவை
முதலாயினவற்றை.
2. ‘ஸ்ரீ பரதாழ்வான் பட்டன எல்லாம்’ என்றதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘ஸ்ரீராமபிரான்’ என்று
தொடங்கி.
“ஸர்வோபாயம் து வர்திஷ்யே விநிவர்தயிதும் பலாத்
ஸமக்ஷம்
ஆர்ய மிச்ராணாம் ஸாதூனாம் குணவர்திநாம்”
என்பது,
ஸ்ரீராமா. அயோத். 82 : 19.
3. மேலதற்கே மற்றும் ஒரு பிரமாணம் காட்டுகிறார் ‘தாமே இரங்கி’ என்று
தொடங்கி.
“அநாஹாரோ நிராலோகோ தநஹீநோ யதா த்விஜ:
சேஷ்யே புரஸ்தாத் சாலாயா யாவந்மே ந ப்ரஸீததி”
என்பது,
ஸ்ரீராமா. அயோத். 111 : 14.
|