வன
வன். பெருமான் -
1வாய்க்கரையிலே எனக்கு ஜீவனத்தை இட்டு என்னை எழுதிக்கொண்டவன். கை கொள் சக்கரத்து
என் கனிவாய்ப் பெருமான் - இராஜபுத்திரர்கள் கையில் 2இடைச்செறி கடைச்செறிகட்குத்
தோற்றிருக்குமாறு போலே, திருவதரத்தில் பழுப்புக்கும் கையும் திருவாழியுமான சேர்த்திக்குமாயிற்று
இவள் எழுதிக்கொடுத்தது.
கண்டு - நான்
அநுபவிக்கப் பாரித்த துறைகள் எல்லாம் நீங்கள் காணவன்றோ புகுகிறது. 3இவளைப்
பற்றினார்க்கு இவளைக்காட்டிலும் பேறு முற்பட்டிருக்குமன்றோ, ஸ்ரீவிபீஷ்ணாழ்வான் முதலியோர் பக்கலிலே
கண்டுகொள்வது. கைகள் கூப்பி-இத்தலையில் இராஜ குலங்கொண்டு மேன்மையடித்திராதீர்கள்; அவர்
பழையர் அல்லர், பெருமதிப்பர் கண்டீர், தொழுதுகொடு நில்லுங்கோள். 4“தலையில்
வணங்கவுமாங்கோலோ” என்று இருக்குமவளன்றோ இவள்தான்; இவள் பரிகரமும் அப்படியே அன்றோ.
சொல்லீர் - தொழுத பின்னர் முகம் பார்த்துக்கொடு நிற்பர், பின்னர் உங்களுக்கு வேண்டினபடி
சொல்லுங்கோள். 5காதல் குணத்திலே கொத்தை சிறிது உண்டானாலும், தானான தன்மை
போகாதே. ஒரு பாசுரமிட்டுச் சொல்ல வேண்டாவோ? என்னில், காதன்மை சொல்லீர்-இத்தலையில்
பசலை நிறம் தொடக்கமான ஆற்றாமையடங்கலும் உங்கள் பாசுரத்தில் அவன் அறியும்படி
சொல்லுங்கோள். காதன்மை என்றவாறே, தம்
1. “கனிவாய்ப் பெருமான்” என்று கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்
‘வாய்க்கரையிலே’ என்று தொடங்கி. வாய்க்கரை - திரு
அதரம்.
2. இடைச்செறி
கடைச்செறிகளாவன : ஒரு விரலிலே கீழும் மேலும் இடுகிற
மோதிரங்கள்.
3. இவள் விரும்பியதைப்
பெறாமலே நோவுபடாநிற்க, இவளைப் பற்றினார்க்குப்
பேறு முற்படக் கூடுமோ? என்ன, அதற்கு விடை
அருளிச் செய்கிறார்
‘இவளைப் பற்றினார்க்கு’ என்று தொடங்கி.
4. இவளுடைய பரிகரங்களுக்குக்
கைகள் கூப்பவேண்டுமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘தலையில்’ என்று தொடங்கி.
இது, திருவாய்.
5. 3 : 7.
5. உன்னை உபேக்ஷித்தவன்,
நாங்கள் தொழுதவாறே முகம் காட்டுமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘காதல் குணத்திலே’
என்று
தொடங்கி. ‘தானான தன்மை’ என்றது, அஞ்சலிக்குக் கட்டுப் பட்டவனாதல்,
கிருபைக்குப் பாரதந்திரியம்
பட்டிருப்பவனாதல்.
|