இவர
இவர்கள்
‘எங்களது’ என்கை அன்றோ அவன் விருப்பத்துக்கு அடி. ‘இவர்களது’ என்னுமிடம்
அறுதியிட்டுக் கொள்ளுகையிலே யன்றோ அவனுக்குத் தாத்பரியம். நீ நினைக்கிறவர்களது அன்று என்கையிலேயன்றோ
இவர்களுக்குத் தாத்பரியம். எங்கள் கையில் பாவை பறிப்பது - இவர்கள் கையிலே பாதிகொடுத்துப்போலே
காணும் பறிப்பது! 1அவர்கள் விட்டுக் கடக்க நிற்குமதில் ஒரு பிரயோஜனம் இல்லையே;
அதனை அவர்கள் ஒருதலை பற்றத் தானும் ஒரு தலை பற்றும்போதேயன்றோ ஒருகலத்திலே உண்பாரைப்போலே
இன்பமாயிருப்பது. கையில் பாவை பறிப்பது - 2கிடக்குமவையெல்லாம் கிடக்க, எங்கள்கையிற்
பாவை பறிப்பது கர்மம் அன்று. 3செய்யக் கடவது அல்லாததனைச் செய்யாநின்றாய்;
உனக்கு இதனால் ஒரு பிரயோஜனம் இல்லைகாண் என்றார்கள். 4ஆக, இதனால், பலித்தது
என்? என்னில், ஒருவைஷ்ணவன் “என்னது” என்று அபிமானித்துக் கைப்பிடித்தால் “அவன்
விரும்புவது” என்றபடி. 5“‘செய்யக்கடவது அல்லாததைச் செய்யாநின்றாய்’ என்று
நீங்கள் சொல்லுவான் என்? செய்யக்கடவனவற்றிற்கும் செய்யக் கடவவல்லாதனவற்றிற்கும் வரம்பு
கட்டினேன் நானே அன்றோ” என்றான்.
1. பாதி கொடுக்கிறது என்?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அவர்கள் விட்டு’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்
‘அதனை அவர்கள்’ என்று தொடங்கி.
2. “கையில்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘கிடக்குமவை யெல்லாம்’
என்று தொடங்கி.
3. “கன்மம்” என்றதற்கு, மேல் ‘காரியம்’ என்று பொருள் அருளிச்செய்தார்.
இங்குக் காரியத்தாலாய
பயன் என்று பொருள் அருளிச்செய்கிறார்
‘செய்யக் கடவது’ என்று தொடங்கி. கன்மம் - கர்மத்தாலாய
பயன்.
4. ‘ஆக, இதனால்’ என்றது, ‘எங்களது’ என்றதனையே காரணமாகக் கொண்டு
அவன் மேல் விழுந்து வந்து
பறிக்கிற இதனால் என்றபடி. ‘பலித்தது என்?
என்னில்’ என்றது, சுலாபதேசத்தில் சொல்லப்பட்ட
பொருள் யாது?
என்னில், என்றபடி.
5. “கன்மம்” என்றதற்கு அருளிச்செய்த இருவகைப் பொருள்களுள்
முதற்பொருளுக்குச் சேர, மேலிற்
பதத்திற்கு அவதாரிகை
அருளிச்செய்கிறார் ‘செய்யக்கடவது’ என்று தொடங்கி. வரம்பு கட்டுகை
- கடலாலே சூழச்செய்தல்.
|