என
என்னைமார்
- ஆணுடன் பிறந்தார். ‘தன்மம் பாவம் என்னார்’ என்றதனால், உன் பக்கல் எங்களுக்குப்
1பாவபந்தம் இல்லை என்னுமிடம் அறியார்கள். நீ மேல் விழுகிறவதனைக் கண்டு, ‘இது
செய்யலாம், இது செய்ய ஒண்ணாது’ என்ற பாராதே நலிவர்காண் என்பதனைத் தெரிவித்தபடி.
‘ஆனால் என்? அவர்கள் இதனை அறியாநின்றார்களோ? அவர்கள் இங்கு இல்லையே?’ என்றான்.
ஒருநான்று - அதுவோ! முதலிலே தவிரில் அறியாதொழியுமத்தனை போக்கி எல்லாம் செய்தாலும் உண்டானால்
ஒருநாள்வரையிலே அறிவர்கள்காண். ‘அழகிது; அறிந்தால் தான் வருவது என்?’ என்றான். தடி பிணக்கே
- பின்னைக் குத்தும் பூசலுமாயன்றோ தலைக்கட்டுவது. 2இராமாவதாரத்தில் எல்லாக்காரியங்களையும்
வில்லினைக் கொண்டே செய்யுமாறுபோலே, கிருஷ்ணாவதாரத்திலே தடிகொண்டே காரியம் கொள்ளுமத்தனை.
(7)
571.
பிணக்கி
யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாததுஓர்
கணக்கில்
கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தினாய்!
இணக்கி
எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப்
[போந்தோமை
உணக்கி,
நீவளைத்தால், என்சொல்லார் உகவாதவரே?
பொ-ரை :-
அழிக்குங்
காலத்திலே அசேதனங்களையும் சேதனங்களையும் ஒன்றாகச் சேர்த்து, பின், படைக்குங் காலத்தில்
ஓர் ஆன்மாவின் கர்ம பலத்தை மற்றோர் ஆன்மா அநுபவியாதபடி படைத்தும் வேறுபடாததாகிய ஒப்பற்ற
எல்லையில்லாத கீர்த்திவெள்ளத்தினையுடைய கதிர் ஞானத்தினையே திருமேனியாகவுடையவனே! எம்தோழிமார்
எம்மை இசையச் செய்து விளையாடுவதற்கு வாருங்கோள் என்ன, வந்த எங்களைத் துவளச்செய்து நீ
வளைத்தால் விருப்பமில்லாதவர்கள் என்ன சொல்லமாட்டார்கள்?
வி-கு :-
பேதித்தும்
பேதியாதது ஓர் ஞானம் என்க. ஞானம் - சங்கல்பரூப ஞானம். கணக்கில் கீர்த்திவெள்ளக் கதிர்ஞானம்
என்க. அத்தகைய
1. ‘பாவபந்தம்’ என்றது,
புணர்ச்சியினை. புணர்ச்சி உண்டு என்று நிரூபித்துச்
செய்தல் தருமம்; நிரூபியாமல் செய்தல் பாவம்.
இரண்டும் பாராமல்
அடிப்பர்கள் என்றபடி.
2. தடி எதற்கு ஆயுதம் இல்லையோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இராமாவதாரத்தில்’
என்று தொடங்கி.
|