ஞ
ஞானமே
மூர்த்தி என்க. எம் தோழிமார் எம்மை இணக்கி விளையாடப் போதுமின் என்னப் போந்தோம் என்க.
ஈடு :- எட்டாம்பாட்டு. 1கிட்டுநின்று இவர்களைச் சிலமிறுக்குக்களைச் செய்யப்
புக்கான்; ‘இங்கே இருக்கில் அன்றோ இவைஎல்லாம் செய்வது’ என்று பார்த்து, ஒருவர் ஒருவராகப்
போகப் புக்கார்கள். ‘இதுவோ பார்த்தபடி!’ என்று வழியைப்பற்றி இருவிலங்காகக் கிடந்தான்.
பூஞ்சோலையாகையாலே வழி ஓர் அடிப்பாடாய் இருக்குமன்றோ. இப் பாசுரத்தைச் சீயர்
அருளிச்செய்யாநிற்கச் செய்தே, அங்கே இருந்தவரான ஆப்பான் ‘இவர்கள் இவனைக் கடந்துபோனார்களாகிற்
செய்வது என்?’ என்று கேட்க, ‘அது யார் காரியம்? பின்னை 2இரண்டத்தில் ஒன்று
சித்திக்கும் என்று அன்றோ அவன் தான் கிடந்தது’ என்று அருளிச்செய்தார்.
3நீ வழியைப் பற்றிக் கிடவாநின்றாய்; நீ செய்கிறவை எல்லாம் உறவு உண்டாய்ச்
செய்கிறாய் என்று இருப்பர்கள்காண்; நீ எல்லா ஆன்மாக்கள் விஷயமகாவும் செய்யும் லீலைக்கு
ஓர் அளவு உண்டோ? உன்னை ஒழிந்த வஸ்துக்கள் எல்லாவற்றுக்கும் கோடி விகாரத்தைச் செய்து,
விகாரம் இல்லாதவனாய் இருப்பான் ஒருவன் அன்றோ; 4அப்படியே எங்களை வேறுபாட்டினையுடையவர்களாகச்
செய்து
1. “உணக்கி நீ வளைத்தால்”
என்றதனைத் திருவுள்ளம்பற்றி, இவன்
அவர்களை வளைத்துக் கிடக்கும்போது, இவன் மிறுக்குக் காரணமாக
அவர்கள் போகப் புக்கார்களாக வேண்டும் என்கிறார் ‘கிட்டி நின்று’
என்று தொடங்கி. மிறுக்குக்கள்
- நிஷ்டூரமான வார்த்தைகள். இருவிலங்கு
- பெருவிலங்கு. வேறு வழியில்லையோ? என்ன, ‘பூஞ்சோலையாகையாலே’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
“உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
கல்லூர் பிழிதரும் புல்சாய்ச் சிறுநெறி”
“வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை
உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி”
“யானைக், கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி”
என்பன,
அகநானூறு, 65, 72, 128.
2. ‘இரண்டத்தில் ஒன்று’ என்றது, தகைவுபட்டு நிற்கையாதல், கடந்து
போகும்போது தீண்டுதலாதல்.
கிடக்கின்றவனைத் தீண்டாமல் தாண்ட
முடியாதே.
3. “பிணக்கி” என்றது முதல், “போதியாதது” என்றது முடிய உள்ளனவற்றிற்கு
அவதாரிகை அருளிச்செய்கிறார்
‘நீ வழியைப் பற்றி’ என்று தொடங்கி.
4. “பேதித்தும் பேதியாதது” என்கிறவர்களுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார் ‘அப்படியே’ என்று
தொடங்கி.
|