முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
136

நீ 1வேறுபாடு இல்லாதவனாய் இராநின்றாய். யாவையும் யாவரும் பிணக்கி-2தன்பக்கல் பொருந்துகைக்கு நினைவு இல்லாதனவற்றையும் நினைவாலே பொருந்தாதனவற்றையும் கூட்டி, 3“மூலப்பிரகிருதியானது பரமாத்மாவினிடத்தில் கலக்கிறது” என்கிறபடியே, தன்னோடு வேற்றுமையறக் கலசி. பிழையாமல் பேதித்தும் - தப்பாமல் பிரித்தும் என்றது, 4வயிற்றில் நின்றும் புறப்பட விடுதல், சம்ஹரித்துப் புறப்படவிடுதல்களைக் குறித்தபடி. ஒவ்வொரு கலகத்திலே அமர்ந்த நிலங்களிலே குடிவாங்கிப் பின்பு தெளிந்தவாறே தம்தம் இடங்களிலே புகுந்து, விட்ட காரியங்களிலே அதிகரிப்பாரைப் போலே. 5ஒருவன் செய்த கர்மம் வேறு ஒருவன் சென்று அநுபவியாதபடி தன்பக்கல் நின்றும் பிரித்தும். பேதியாதது ஓர்கணக்கு இல் கீர்த்திவெள்ளம் கதிர் ஞான மூர்த்தியினாய்-6காரிய நிலையானதுவே காரண நிலையானாலும், காரண நிலையில் அசித்தைப்பற்றி வருகின்ற சூக்ஷ்மபரிணாமம், சேத

 

1. ‘நீ வேறுபாடு இல்லாதவனாய் இராநின்றாய்’ என்றது, பிரிவினால் வந்த
  கலக்கமும், கலவியால் வந்த வேறுபாடும் இல்லாமலே இருக்கின்றாய்
  என்றபடி.

2. “யாவையும் யாவரும்” என்று, அஃறிணையை முன்னும் உயர்திணையைப்
  பின்னுமாக அருளிச்செய்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘தன்பக்கல்’
  என்று தொடங்கி. என்றது, இருவகையான பொருள்களுக்கும் பொருந்தாமை
  பொதுவாகையாலே அசேதனங்களோடே சேதனர்களையும் கூட்டி
  அருளிச்செய்கிறார் என்றபடி. ‘நினைவாலே’ என்றது, நினைவு
  உண்டாயிருக்கச் செய்தே என்றபடி.

3. ‘கூட்டி’ என்னாமல், “பிணக்கி” என்றதற்கு, பாவம் அருளிச் செய்கிறார்
  ‘மூலப்பிரகிருதியானது’ என்று தொடங்கி.

  “தம: பரே தேவ ஏகீபவதி” சுபால உப. 2.

4. ‘வயிற்றில் நின்றும் புறப்படவிடுதல்’ என்றது, அவாந்தர பிரளய காலத்திலே
  என்க. ‘சம்ஹரித்துப் புறப்படவிடுதல்’ என்றது, மஹாப்பிரளய காலத்திலே
  என்க. ‘வயிற்றில் நின்றும் புறப்படவிடுதல்’ என்றதற்குத் திருஷ்டாந்தம்
  காட்டுகிறார் ‘ஒவ்வொரு கலகத்திலே’ என்று தொடங்கி.

5. சம்ஹரித்துப் புறப்படவிடுதல் என்ற பொருளில் “பிழையாமல்” என்றதற்குப்
  பொருள் அருளிச்செய்கிறார் ‘ஒருவன் செய்த கர்மம்’ என்று தொடங்கி.
  பிரித்தும் - சிருஷ்டித்தும்.

6. ‘காரிய நிலையானதுவே’ என்றது முதல், ‘வேற்றுமைகள் ஒன்றுமின்றிக்கே’
  என்றது முடிய, “பேதியாதது” என்பதற்குப் பொருள். ‘காரிய
  நிலையானதுவே’ என்றது, காரிய நிலையான பிரஹ்ம சொரூபமே என்றபடி.
  ‘சொரூபத்தின் வேறுபாடு’ என்றது, ஸ்தூலபரிணாமம். இது, மேலே
  ‘சூக்ஷ்மபரிணாமம்’ என்றதற்கு மறை. ‘தன்மையின் வேறுபாடு’ என்றது,
  ஞானத்தின் மலர்ச்சி. இது, மேல், ‘சேதனத்தைப் பற்றி வருகின்ற
  அஜ்ஞானம்’ என்பதற்கு மறை.