மளவ
மளவிலே இத்தலைக்கும்
உள்ளது என்று இருப்பர்; 1“ஒத்த விஷயமானால், விளையுமதுவும் ஒத்ததாய் இருப்பது” என்றன்றோ
அவர் இருப்பது. அல்லாத ஏற்றங்களைப் போன்றதே அன்றோ ஆற்றாமையில் வந்தால் இருக்கும்படியும்
இத்தலைக்கு. வினையாட்டியேன் காதன்மை சொல்லீர் - அவர் ‘இவ்வூர்க்கு அவ்வூர் காதம்’ என்றிருந்தால்,
அப்படியே, ‘இவ்வூர்க்கு அவ்வூர் காதம்’ என்றிருக்க மாட்டாத பாபத்தைச்செய்த என்னுடைய காதல்.
தமக்கு இத்தலையை ஒழியச் செல்லும்படியாயிருந்தாலும், எனக்கு அத்தலையை ஒழியச் செல்லாதபடியான
பாபத்தைச் செய்தேன். 2வன்னெஞ்சர் காதல் போன்றதன்றே மென்னெஞ்சர் காதல்;
மெல்லியலார் காதல் அளவல்லாத என் காதல் சொல்லீர். 3அங்கு நின்றும் வந்தார்க்கு
வார்த்தை சொல்லிவிடவும் பெற்றிலேன். சொல்லுவார் தாழ்வே; வரவு தப்பாது என்று
இருக்கிறாள்.
(1)
554.
காதல் மென்பெடையோடு
உடன்மேயுங் கருநாராய்!
வேத வேள்வி ஒலிமுழங்கும்
தண்திருவண்வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம்
உண்ட நம்பெருமானைக் கண்டு
பாதம் கைதொழுது பணியீர்
அடியேன் திறமே.
பொ-ரை :-
காதலுக்குரிய மெல்லிய பேடையோடு உடன் சேர்ந்து மேய்கின்ற அழகிய நாரையே! வேதவேள்விகளின்
ஒலி மாறாமல் முழங்கிக் கொண்டிருக்கின்ற குளிர்ந்த திருவண்வண்டூரில் எழுந்தருளியிருக்கின்ற நாதனும்,
உலகத்தை எல்லாம் புசித்த நம்பெருமானுமான சர்வேசுவரனைக் கண்டு, திருவடிகளைக் கைகளால் தொழுது,
அடியேனுடைய தன்மையைச் சொல்லியருளாய் என்கிறாள்.
1. அப்படி இருத்தற்குக் காரணம்
என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘ஒத்த விஷயமானால்’ என்று தொடங்கி. ‘அவர்
இருப்பது’ என்கிறது, ஏன்? பொருளின் தன்மையும் அப்படி அன்றோ?
என்ன, ‘அல்லாத ஏற்றங்கள்’
என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார். ‘அல்லாத ஏற்றங்கள்’ என்றது, “அஸிதேக்ஷணா -
கறுத்த கண்களை யுடையவள்” என்றது முதலானவற்றை.
2. அவ்
விருபொருள்களையும் விவரணம் செய்கிறார் ‘வன்னெஞ்சர்’ என்று
தொடங்கி.
3. “வினையாட்டியேன்”
என்பதற்கு, பிராட்டியினின்றும் வேறுபடுத்தி வேறும்
ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘அங்கு நின்றும்’
என்று தொடங்கி.
|