572
572.
உகவையால்
நெஞ்ச முள்ளுருகி உன்தாமரைத்தடங்கண்விழிகளின்
1அகவலைப்
படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை;
எங்கள் சிற்றிலும் யாமடு சிறுசோறும் கண்டு,நின்
முக ஒளி
திகழ முறுவல் செய்து நின்றிலையே.
பொ-ரை :-
மகிழ்ச்சியாலே மனமானது உருகும்படியாக, உனது தாமரைபோன்ற விசாலமான திருக்கண்களின் பார்வையாகிற
வலைக்குள்ளே அகப்படுத்துவதற்கு, எங்களுடைய சிற்றிலையும் யாங்கள் சமைக்கின்ற சிறு சோற்றினையும்
பார்த்துக்கொண்டு நினது முகத்தின் ஒளி திகழும்படியாகப் புன்முறுவல் செய்துகொண்டு நின்றாய்இல்லை;
உன் திருவடியால் அழித்தாய்; அதனால் தக்க காரியத்தைச் செய்தாயில்லை.
வி-கு :-
நெஞ்சம்
உள் உருக, கண்டு திகழ முறுவல்செய்து நின்றிலை; சிற்றிலையும் சிறுசோறும் உன் திருவடியால் அழித்தாய்;
தகவு செய்திலை என முடிக்க. உருக என்பது, உருகி எனத் திரிந்து நின்றது. வலை அகப்படுப்பான் முறுவல்செய்து
நின்றிலை என்க. அகவலைப் படுப்பான் என்பதனை, வலை அகப்படுப்பான் எனப் பிரித்துக் கூட்டுக.
பிரித்துக் கூட்டாது, நின்றவாறே பொருள் கோடலுமாம்.
ஈடு :- ஒன்பதாம்பாட்டு. 2“இவன் ‘போகவொட்டேன்’ என்று வளைத்துக் கிடந்ததற்குப்
பிரயோஜனம் உள்ளது இவன் நினைத்தபடி பரிமாறப் பெற்றால் அன்றோ? ஒருதேச விசேடத்திலே முக்தர்
சம்சாரிகளோடு உறவு அற்று இருக்குமாறுபோன்று இவன் முகம் பாராதே இருக்கிறோம்” என்று அறுதியிட்டுப்
பேசாதே இருந்தார்கள்; பின்னர், நாம் இங்ஙனம் இருப்பின் இவன், ‘தன்னை நினைத்துக் கொண்டிருந்தோம்
என்று இருப்பான்’ என்று ‘வேறுஒன்றிலே நோக்குள்ளமை தோற்றச் சிற்றில் இழைப்போம்’ என்று
இழைக்கப் புக, ‘என்னைப் பாராதே இருப்பது மன்றிக்கே வேறுஒன்றிலே சிறிது நோக்குள்ளவர்களாகவும்
இருப்பதே’ என்று சிற்றிலையும் சிறுசோற்றினையும்
1. முற்றிலைப் பந்தைக் கழங்கைக்கொண்டோடினை முன்னும், பின்னும்
அற்றிலை தீமை, அவைபொறுத்தோம்; தொல்லை ஆலினிளங்
கற்றிலை மேற்றுயில் வேங்கடவா! இன்றுன் கான்மலரால்
சிற்றிலைத் தீர்த்ததற்குப் பெருவீட்டினைச் செய்தருளே.
என்ற
அருமைத் திருப்பாசுரம் இங்கு நினைவிற்கு வருகின்றது.
திருவேங்கடத்தந். 97.
2. “அழித்தாய் உன்திருவடியால்” என்றதனைக் கடாக்ஷித்து, அதற்குத்
தகுதியாக அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|