ஜ
ஜு ரத்தாலே
பீடிக்கப்பட்டவர்களைப் போலே பிதற்றுமித்தனை அன்றோ. “தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும்
தலைமகனை” என்பதன்றோ மறைமொழி. உன் திருவடியால் அழித்தாய் - 1தன் சிற்றிலை
அன்றோ சங்கல்பத்தால் அழிக்கலாவது; 2இவர்களுடைய சிற்றிலைத் தொட்டு அழிக்க
வேணுமே; 3உன் சிற்றில் அழிக்கும் பரிகரம் அமையாதோ இதற்கு? உலகத்தை அழிப்பது
சங்கல்பத்தாலே அன்றோ. 4அடியவர்களுக்குத் திருவடிகள் உத்தேசியமாமாறு போன்று காதலிமார்கட்கும்
உத்தேசியமாய் அன்றோ திருவடிகள் இருப்பன. அழித்தாய் - 5வெறும் சிற்றிலை அன்றுகாண்
நீ அழித்தது; எங்கள் அகவாயையும் நீ அழித்தாய்காண்; சிற்றிலோடு எங்கள் சிந்தையையும் சிதைத்தாய்காண்.
6காலாலே சிற்றிலை அழித்து, கண்ணாலே எங்கள் எண்ணங்களையும் அழித்தாய்காண் என்கிறார்கள்.
தகவு செய்திலை - கிருபையுடையார் செய்வதைச் செய்திலை. 7பிரிந்தபோதே அன்புடைமை
போயிற்றே யன்றோ; இனிக் கண்ணுடையார் செய்வதும் செய்திலை என்னுதல். கண் படைத்ததற்குப்
பிரயோஜனம் நல்லதுகண்டு கொண்டிருத்தலன்றோ? 8உன் முகத்தன கண்கள் அல்லவே?
‘நான் செய்த குறை என்?’ என்ன, எங்கள்
1. சங்கல்பத்தால் அழிக்க
ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘தன்சிற்றிலை’ என்று தொடங்கி. தன்சிற்றில்
- இந்த
உலகம்.
2. “திருவடியால் அழித்தாய்” என்றகிறவர்களுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார் ‘இவர்களுடைய
சிற்றிலை’ என்று தொடங்கி.
3. அவன் சிற்றில் உலகம் என்னுமதனையும், அதனை அழிக்கும் சாதனம்
கங்கல்பம் என்னுமதனையும்
விளக்கமாக அருளிச்செய்கிறார் ‘உன் சிற்றில்’
என்று தொடங்கி.
4. காதலியானவள், ‘காலால்’ என்னாமல், “திருவடியால்” என்றதற்குக் கருத்து
அருளிச்செய்கிறார்
‘அடியார்களுக்கு’ என்று தொடங்கி.
5. மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘வெறும் சிற்றிலை’ என்று தொடங்கி.
அதனை விவரணம் செய்கிறார்
‘சிற்றிலோடு’ என்று தொடங்கி. இங்கே,
“முற்றத்தூடு புகுந்து” என்ற நாய்ச்சியார் திருமொழி திருப்பாசுரம்
அனுசந்தேயம். 2 : 9.
6. அழித்த பிரகாரம் யாங்ஙனம்? என்ன, ‘காலாலே’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
7. காதலி, கிருபை செய்திலை என்னலாமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘பிரிந்தபோதே’
என்று தொடங்கி. தகவு - அருள்.
இரண்டாவது பொருளில், ‘கண்’ என்பதற்கு, நீதி என்பது பொருள்.
8. நல்லது காணாதபோது கண்படைத்ததற்குப் பயன் இல்லையோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘உன்முகத்தன’ என்று தொடங்கி. இது,
நாய்ச்சியார் திருமொழி, 2 : 5.
|