முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
145

    நின்று இலங்கு முடியினாய் - 1இவர்களை வெல்வதற்கு முன்பு தலைச்சுமையாய்க் காணும் கிடந்தது; இப்போதாயிற்று நற்றரித்து ஒளிவிடத் தொடங்கிற்று. 2இராசாக்கள் சிலர் தந்தாம் பகைவர்களை அழித்து வீர அபிடேகமும், விஜய அபிடேகமும் பண்ணிநிற்குமாறு போலே. முன்பே முடிசூடி இருக்கச் செய்தேயும் இவர்களைத் தோற்பிப்பதற்கு முன்பு இல்லாததற்குச் சமமாகக் காணும் இருந்தது. 3இராவணன் முதலாயினோர்களை வென்றதற்கு முடி சூடினது போன்று அன்று காணும், காதலிமார்களை வென்றதற்குச் சூடின முடி இருப்பது; 4இவர்கள் எண்ணங்களைக் குலைத்துப் பொருந்தவிட்டுக் கொண்ட பின்பு காணும் மேன்மையையுடையவனாய்ப் பிரகாசிக்கின்றவனுமாய் முடியும் நற்றரித்தது. 5“ஸ்ரீராமபிரான் விபீடணனை அரக்கர்களுக்குத் தலைவனாக இலங்கையில் அபிடேகம் செய்து, அப்போது செய்து முடித்த எல்லாக் காரியங்களையுமுடையவராயும் நடுக்கம் அற்றவராயும் மகிழ்ந்தார் அன்றோ.” 6ஸ்ரீபரதாழ்வானைப்போலே, ‘நான் முடி சூடேன், நீர் முடிசூடும்’ என்று முடிக்கு இறாய்க்கின் செய்வது என்? என்று உடம்பு வெளுத்துக் காணும் இவர் இருந்தது; 7‘ஒருபடி அத்

 

1. இப்பொழுது, நிலைபெற்றுப் பிரகாசிக்கின்றது என்கையாலே, இதற்கு
  முன்னர் அங்ஙனம் இல்லை என்று தோற்றுகிறதே யன்றோ; அதனை
  அருளிச்செய்கிறார் ‘இவர்களை’ என்று தொடங்கி. ‘நற்றரித்து ஒளிவிடத்
  தொடங்கிற்று’ என்பது, “நின்று இலங்கு” என்றதன் பொருள்.
 

2. அதனைத் திருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறார் ‘இராசாக்கள் சிலர்’
  என்று தொடங்கி. வீராபிடேகம் செய்துகொண்டது, அபிமந்யு.
  விஜயாபிடேகம் செய்துகொண்டது, அருச்சுனன்.

3. பெண்களை வென்று முடி சூடினான் என்றது, ஒரு அதிசயமோ? என்ன,
  ‘இராவணன்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. “நின்று இலங்கு முடியினாய்” என்ற மூன்று பதங்களின் பொருள்களை
  அவரோகணக் கிரமத்தாலே விவரிக்கிறார் ‘இவர்கள்’ என்று தொடங்கி.

5. இவர்களைப் பொருந்தவிட்டுக் கொண்டபின்பு, தான் கிருதக் கிருத்யனாய்
  இருந்ததற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘ஸ்ரீராமபிரான்’ என்று தொடங்கி.

  “அபிஷிச்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்த்ரம் விபீக்ஷணம்
   க்ருதக்ருத்ய: ததா ராமோ விஜ்வர: ப்ரமுமோத ஹ”

  என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 85.

6. நன்று; “அபிஷிச்ய க்ருதக்ருத்ய: - அபிடேகத்தைச் செய்து தன்
  கடமையைச் செய்து முடித்தவரானார்” என்பது என்? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ பரதாழ்வானைப் போலே’ என்று தொடங்கி.

7. உடம்பு வெளுத்திருந்த பெருமாளுடைய திருவுள்ளக் கருத்தை
  அருளிச்செய்கிறார் ‘ஒருபடி’ என்று தொடங்கி.