ஆய
ஆய்ச்சியோமே
- 1பகைவர்களாய் முடிந்து போகப்பெறாதே, சம்சாரிகளாய் வேறு ஒன்றிலே நோக்குள்ளவர்களாய்ப்
போகப் பெறாதே, நீ நலியவும் நாங்கள் நோவுபடவுமாம்படி சமைந்து விட்டதன்றோ! 2இரண்டு
தலையும் கூடி மேல்விழுந்து அணைத்துக் கொண்டு நின்று சொல்லுகிற வார்த்தை அன்றோ. இவ்வளவும்
தங்கள் வெற்றியே அன்றோ சொல்லிப் போந்தது; இப்போது அன்றோ தங்கள் தோல்விக்கு இசைந்தது.
நலிவேபடுவோம் - 3இதுதான் எங்களுக்கு மெய்யாகப் புகாநின்றதோ, எங்களுடையது அன்றோ
எங்களுக்குச் சித்தித்து விடுவது. இவர்களுடையதாவது, 4“கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்”
என்று மெலிவேயாயிருக்கை. செய்வது இன்னது என்று அறியாத தாங்கள் என்பார் “ஆய்ச்சியோமே”
என்கிறார்கள்.
(10)
574.
ஆய்ச்சியாகிய
அன்னையால்அன்று வெண்ணெய் வார்த்தையுள்சீற்ற
[முண்டழு
கூத்த
அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய
தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால்
நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.
1. “நின் தன்னால் நலிவே
படுவோம்” என்கிறவர்களுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார் ‘பகைவர்களாய்’ என்று தொடங்கி.
“அரசுகளைகட்ட,
வியன்ஞாலம்” என்பனவற்றைக் கடாக்ஷித்து, ‘பகைவர்களாய்’ என்றும்,
‘சம்சாரிகளாய்’ என்றும் தொடங்கி அருளிச்செய்கிறார்.
2. “நலிவே படுவோம்” என்ற இது, ‘பிரணயரோஷத்தாலே சொல்லுகிற
வார்த்தையோ?’ என்ன,
‘இரண்டுதலையும்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். இங்ஙனம் தாம் அருளிச்செய்ததற்குக்
காரணத்தை அருளிச்செய்கிறார் ‘இவ்வளவும்’ என்று தொடங்கி.
3. இப்போது, கலவி சித்தித்திருக்க “நலிவே படுவோம்” என்பான் என்? என்ன,
அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இதுதான்’ என்று தொடங்கி.
4. “கூடிலும் நீங்கிலும்” என்பது, திருவிருத்தம்.
இத்திருப்பாசுரக் கருத்தோடு,
“வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்”
என்னும் திருக்குறள், ஒரு புடை ஒப்புமையுடைத்தாம்.
|