வ
வார்த்தையுள்
- 1ஊரில் ‘வெண்ணெய் களவு போயிற்று’ என்றார்கள்; அவ்வளவிலே
‘நாம் அன்றோ இதற்கு இலக்கு’ என்று அழப்புக்கான். 2‘மடம் மெழுகுவார்
யார்?’ என்ன, ‘அஸ்ரோத்திரியன்’ என்றார்கள்; ‘இப்பரப்பு எல்லாம் என்னாலே மெழுகப்போமோ’
என்றான்; அதுபோலே. 3யாரேனும் ஏதேனும் செய்யிலும் இவனைச் சொல்லும்படியன்றோ
இவனுடைய தீம்பு தான் இருப்பது! “பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் எல்லாம்
உன் மேலன்றிப் போகாது” என்னும்படியன்றோ இருப்பது. சீற்றம் உண்டு அழு கூத்த அப்பன் தன்னை -
4தாயார் பொடியப் பொடியுண்டு அழுகிற நிலையில் “பையவே நிலையும்” என்கிறபடியே நிற்கிற
நிலை, வல்லார் ஆடினாற்போலே இருந்தபடி. 5அன்றிக்கே, அழுகையாகிற கூத்தையுடைய
மஹோபகாரகனை என்றுமாம். 6இது ஒன்றற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லுகிறது, “போகு
நம்பி” என்றும், “கழகம் ஏறேல் நம்பீ” என்றும் இவர்கள் சொன்னபோது ஒன்றிலும்
1. ‘வெண்ணெய் உண்டு அழு’
என்னாமல், “வார்த்தையுள் அழு” என்று
விசேடித்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘ஊரிலே’ என்று
தொடங்கி.
2. சொன்ன மாத்திரத்திலே தன் மேலே ஏறிட்டுக்கொள்ளுவதற்குத்
திருஷ்டாந்தம் காட்டுகிறார்
‘மடம் மெழுகுவார்’ என்று தொடங்கி.
அஸ்ரோத்திரியன் - சுரோத்திரியம் இல்லாதவன்; பிராமணன்
அல்லாதவன். சுரோத்திரியம் - இனாம் நிலம்.
3. ‘இவன்’ என்று தன்னைச் சொல்லாதிருக்க, தன்பேரிலே ஏறிட்டுக்கொண்டு
இவன் அழுதற்குக் காரணம்
யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘யாரேனும்’ என்று தொடங்கி. அதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘பல்லாயிரவர்’ என்று தொடங்கி. இது, பெரியாழ்வார்
திருமொழி, 2. 8 : 5.
4. அழுகை கூத்து ஆகமாட்டாமையாலே, அழுகிறபோது “பையவே நிலையும்”
என்கிறபடியே நிற்கிற நிலை
என்கிறார் ‘தாயார் பொடிய’ என்று
தொடங்கி. என்றது, தமக்குக் கவர்ச்சிகரமாயிருக்கையாலே
“கூத்த அப்பன்”
என்கிறார் என்றபடி. ‘பையவே’ என்பது, திருவாய். 5. 10 : 3.
5. இரண்டாவது பொருளுக்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று
தொடங்கி. என்றது,
எல்லாரையும் நியமிக்கின்றவனுக்கு அழுதற்குத் தகுதி
இல்லாமையாலே அழுகிறானாகப் பாவித்தான் என்றபடி.
6. “அழு கூத்த அப்பன்” என்று வர்ணிப்பது ஏன்? என்ன, ‘இது ஒன்றற்கு’
என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். தியோதகம் - சூசகம்,
குறிப்பு.
|