முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
160

விபூதி ததீயத்வ ஆகாரத்தாலே உத்தேசியமாகா நின்றதன்றோ. 1இவர்க்கும் அப்படி முக்தரோடு ஒக்கத் ததீயத்வ ஆகாரம் ஒழிய, வேறு ஆகாரமாக நினைவு இல்லாதபடி இங்கே இருக்கச் செய்தே மயர்வு அறுத்துக் கொடுத்தான். 2தம்முடைய சம்பந்தத்தாலே பார்த்த போது கால்வாங்கியல்லது நிற்க ஒண்ணாதபடி தியாஜ்யமாகத் தோற்றும். 3அன்றிக்கே, ஞான அஜ்ஞானங்களுக்குப் பொதுவான இந்த இருப்பைக் கழித்து, அதற்குக் கலக்கமில்லாத தேசத்திலே போகையிலே விரையக்கடவன் எனப்படுதலால் என்னுதல். பல்வகையும் பரந்த பெருமான் - இப்படி உலக முகத்தாலே பலபடியாக விரிந்திருப்பவனானவன். பரந்த பெருமான் என்னை ஆள்வானை - இங்ஙனம் பரந்து இருத்தல் எல்லாம் தம்மை அகப்படுத்த என்று இருக்கிறார்; 4ஒருவனை அகப்படுத்த நினைத்தார் ஊரை வளையுமாறு போலே. செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேன்-5மருபூமியிலே பொய்கை கண்டாற்போலே இருக்கிறபடி. மிக்க செல்வத்தை யுடைத்தான குடிகளையுடைய திருவிண்ணகர் என்பார் ‘செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்’ என்கிறார்.

 

1. அது இவர்க்குத் திருமேனியோடே இருக்கச்செய்தே கூடுமோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவர்க்கும் அப்படி’ என்று தொடங்கி.


2. ஆயின், “இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை” என்று தியாஜ்யமாகச்
  சொல்லுவான் என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தம்முடைய’
  என்று தொடங்கி.

3. மேலதற்கே, வேறும் ஒரு காரணத்தை அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’
  என்று தொடங்கி. “பரந்த பெருமான்” என்று வியாப்தியைச் சொன்னபின்பு
  “என்னை ஆள்வான்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இங்ஙனம்’
  என்று தொடங்கி.

4. இவர் ஒருவரை அகப்படுத்தற்கு எங்கும் பரந்திருத்தல் வேண்டுமோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஒருவனை’ என்று தொடங்கி.

5. “கண்டேனே” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘மருபூமியிலே’ என்று
  தொடங்கி. மருபூமி - நீரும் நிழலும் அற்ற பாலை நிலம். திருக்குறள், 742.
  காண்க.