இ
இது என்ன
அநுசந்தான முறைதான்! 1இவனை ஒழிந்தது ஒரு வஸ்துவுக்கு சத்பாவம் இன்றிக்கே இருக்கிறபடி
அன்றோ.
2நல்லாரும், நம்பி ஸ்ரீசேநாபதிதாசரும்
கூடத்
திருமலைக்குப் போகாநிற்க, ஸ்ரீசேநாபதிதாசர் ஒரு கோலையிட்டுத் தூற்றை அடிக்க, நல்லார் ‘அர்த்தகாம
நிமித்தமான துவேஷம் இதனோடு இன்றிக்கே இருக்க, ஒரு காரணமும் இல்லாமல் ஈசுவரனுடைய விபூதியை
நலிவதே!’ என்ற வார்த்தையை நினைப்பது. என்னை ஆள்வான் ஊர் - என்னை இழக்கமாட்டாமல்
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில் மிறுக்கு எல்லாம் பட்டு என்னை அடிமை கொண்டவனுடைய
ஊர். தெண் திரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நல்நகரே - தெளிந்த திரைகளையுடைத்தான புனலாலே
சூழப்பட்ட திருவிண்ணகராகிற நன்னகர். 3திவ்விய நதியான விரஜைக்குப் போலியான
ஆறும் உண்டாகப்பெற்றது என்பார் ‘தெண்திரைப் புனல் சூழ்’ என்கிறார். 4அங்கு
இருக்கிறவன் இங்கே வந்து நின்றால் அங்கு உள்ளவை எல்லாம் இங்கு உண்டாகத் தட்டுஇல்லையே.
5அன்றிக்கே, இவ்வளவில் முகங்காட்டாத ஸ்ரீ வைகுண்டமும் ஒரு தேசமாயிற்றதோ?
6அவன் விரும்பின இடம் பிராப்பிய பூமியாமித்தனையன்றோ.
(2)
1. இந்த அநுசந்தான முறைக்கு
அடி ஏது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இவனை ஒழிந்தது’ என்று தொடங்கி. சத்பாவம்
-
உளதாந் தன்மை.
2. ஞானிகட்கு எல்லாம் பரம்பொருள் மயமாகவே தோற்றும் என்பதற்கு
ஐதிஹ்யம் காட்டுகிறார்
‘நல்லாரும்’ என்று தொடங்கி.
3. திருவிண்ணகரை “நன்னகர்” என்று, பரமபதத்தோடு ஒத்ததாக மேலே
அருளிச்செய்கையாலே, இங்கே
இருக்கிற ஆறும் விரஜையோடு ஒத்தது
என்கிறார் ‘திவ்விய நதியான’ என்று தொடங்கி.
4. இதனைப் பரமபதம் என்றும், இந்த ஆற்றை விரஜை நதி என்றும்
சொல்லுவதற்குக் காரணத்தை
அருளிச்செய்கிறார் ‘அங்கு இருக்கிறவன்’
என்று தொடங்கி.
5. திருவிண்ணகரமாகிற நன்னகரம் என்று மேலே அருளிச்செய்தார்.
திருவிண்ணகரே நல் நகர் என்று
வேறும் ஒரு பொருள் அருளிச் செய்கிறார்
‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
6. இந்த உலகத்தில் இருக்கும் இருப்பு, பரமபதம்போன்று உத்தேசியமாக
இருக்குமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘அவன் விரும்பின’
என்று தொடங்கி. பிராப்பிய பூமி - பரமபதம்.
|