அவன
அவன்
வர, ‘வேண்டா’ என்று முடிந்து போகப் புக்காரன்றோ. 1இவன் பார்க்கும் உபாயம்
இவனுக்கும் கழுத்துக்கட்டியாம். அவன் காட்டும் உபாயம் அவனுக்கும் காற்காட்டாம். இதுவன்றோ உபாயத்தில்
அடிப்பாடு.
(3)
578.
2புண்ணியம்
பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய்
மறப்பாய் 3உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண
மாடங்கள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன்
இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.
பொ-ரை :-
புண்ணியம் என்ன, பாவம் என்ன; புணர்ச்சி என்ன, பிரிவு என்ன; ஆகிய இவையாகியும், நினைவு ஆகியும்,
மறப்பு ஆகியும், உண்மையாகியும், இன்மையாகியும், கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாகியும், திண்ணிய
மாடங்கள் சூழ்ந்த திருவிண்ணகரம் என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற
பிரானாகிய ஸ்ரீ கிருஷ்ணனுடைய இனிய திருவருளையே உய்வு பெறுதற்குரிய புண்ணியமாகக் கண்டு கொள்ளுங்கள்;
யான் கூறும் இது கைதவம் அன்று.
வி-கு :-
ஆய்
ஆய் ஆய் ஆய் ஆய் ஆய் சேர்ந்த பிரான் இன்னருளே கண்டுகொண்மின் என்க. ‘கைதவமே’ என்றதிலுள்ள
ஏகாரம், எதிர்மறைக்கண் வந்தது. கைதவம் - வஞ்சனை. ஈண்டு, பொய்யைக் காட்டுகிறது.
ஈடு :-
நான்காம்பாட்டு.
4புண்ணியம் பாவம் முதலானவைகளாய் எம்பெருமானுக்கு விசேடணமாகத் தோற்றுகிற விபூதிகள்
எல்லாம் அவன் கிருபையாலே உண்டாயின என்கிறார்.
1. ‘தாம் தாம் செய்யும்
முயற்சி தடையாம், அவன் கீர்த்தியே உபாயமாம்’
என்கிற இதனால், இவன் பார்க்கிற உபாயத்தினுடைய
தாழ்வினையும்,
அவன் காட்டும் உபாயத்தினுடைய ஏற்றத்தினையும் அருளிச்செய்கிறார்
‘இவன்
பார்க்கும்’ என்று தொடங்கி. ‘அவனுக்கும் காற்கட்டு’ என்றது
“போகுநம்பி” என்றாலும் போகாமாட்டாமையை
நினைத்து.
2. “நன்றாங் கறிந்தவர்க்குந் தானேயாகி
நல்வினையும் தீவினையு மானான்தன்னை”
என்பது,
தேவாரம்.
(அப்பர்.)
3. “ஒத்தானே பொருளானே உண்மையுமாய் இன்மையுமாய்ப்
பூத்தானே” என்பது, திருவாசகம்.
(திருவேசறவு. 8.)
4. முதலில் இருந்து “கண்ணன் இன்னருளே” என்றது முடியக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|