1அர
1அர்த்தவாதம்
இல்லை. கண்டுகொண்மின்கள் - நீங்களும் எல்லாம் சாஸ்திரங்களிலே கண்டுகொள்ளுங்கோள். அன்றிக்கே,
கைதவமே - என்பதற்கு, செய்யப்பட்டவை என்றபடியாய், செய்யப்பட்டவை அடங்கலும் அவனுடைய காரணமில்லாமலே
செய்யப்படுகின்ற இனிய திருவருளாலே உண்டாயின என்னுதல்.
(4)
579.
கைதவம்
செம்மை கருமை வெளுமையுமாய்
மெய்பொய்
இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த
திண்மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பெய்த
காவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே.
பொ-ரை :-
வஞ்சனையும்
நேர்மையுமாகி, கருமையும் வெண்மையுமாகி, மெய்யும் பொய்யுமாகி, இளமையும் முதுமையுமாகி, புதுமையும்
பழமையுமாகி, செய்யப்பட்ட திண்ணிய மதிள்களாற் சூழப்பட்ட திருவிண்ணகரம் என்னும் திவ்வியதேசத்தில்
நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் வைத்து வளர்க்கின்ற சோலை காண்மின்;
பெரிய தெய்வங்களையுடைய இந்த மூன்று உலகங்களும்.
வி-கு
:-
பெருந்தேவுடை மூவுலகு, ஆய், சேர்ந்த பிரான் பெய்த காவு கண்டீர் என்க. கா - சோலை.
ஈடு :-
ஐந்தாம்பாட்டு.
2சிறியார் பெரியார் என்னாதே எல்லார்க்கும் ரக்ஷகன் திருவிண்ணகர் சேர்ந்த
பிரான் என்கிறார்.
கைதவம் செம்மை - வஞ்சனை நேர்மைகள். கருமை வெளுமை - கருப்பு வெளுப்பு. மெய் பொய் - உண்மை
இன்மை. இளமை முதுமை - இளமை கிழத்தனம். புதுமை பழமை - புதுமையும் பழமையும். செய்த திண் மதிள்
சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் - காலம் செல்லச் செய்தேயும் இப்பொழுது செய்தாற்போலே
இருக்கிற தொழிலின் புதுமையைச் சொல்லுகிறது. பெய்த காவு கண்டீர் - வைத்து ஆக்கின
1. அர்த்தவாதம் -
புனைந்துரை.
2. தேவர்கள் முதலானவர்களையுடைய மூன்று உலகமும் அவன்
உண்டாக்கின சோலை என்கையாலே தோற்றுகிற
கருத்தினை அருளிச்
செய்கிறார் ‘சிறியார் பெரியார்’ என்று தொடங்கி.
“எல்லாமாய்க் கொண்டிருக்கிற திருவிண்ணகர் சேர்ந்த பிரான் பெய்த
காவு” என்கையாலே, சொரூப
ஐக்யம் சொல்லுகிறது அன்று; சாமாநாதி
கரண்ய நியாயத்தாலே காரிய காரண பாவத்தைச்
சொல்லுகிறது.
|