முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
17

1அ

1அது வாய் அலகாலே கோத்து எடுத்துக்கொடுத்தால், பின்பு ஆராய வேண்டாதே மிடற்றுக்குக்கீழே இழித்துமித்தனை இது செய்வது. பேடையின் நினைவு அறிந்து உண்பிக்கும் சேவலும் உண்டாகாதே! உடன்மேயும் கருநாராய் - 2அதற்கு ஒரு குற்றம் தேடிச் சொல்லுவாரைப்போலே சொல்லுகிறாள் தன் காரியம் செய்கைக்காக. 3அடுகுவளத்தைத் தடுப்பாரைப்போலே. 4தன் துயர் ஒலி செவிப்பட்டால் அவற்றுக்கு மிடற்றுக்குக் கீழ் இழியாது என்று இருக்கிறாள் காணும். கூடத்திரிகையாலே நரை திரை நீங்கி வடிவு புகர் பெற்றிருத்தலின் ‘கருநாராய்’ என்கிறாள். 5பிரியாதார்க்கு உடம்பு வௌாதாகாதே. தான் உடம்பு வெளுத்துக்கிடக்கிறாள் அன்றோ.

    வேதம் வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் - இவற்றின் அறிவுகேடு 6பலித்தபடி சொல்லுகிறது. அங்கு உண்டான வேத ஒலி, வைதிகக்கிரியை, இவற்றைக் கண்டு கால்தாழ வேண்டாவேயன்றோ இவற்றுக்கு. தன் நாயகன் அவை கண்டன்றோ

 

1. “பெடையோடு” என்ற மூன்றாம் வேற்றுமை உருபிற்குப் பொருள்
  அருளிச்செய்கிறார் ‘அது வாயலகாலே’ என்று தொடங்கி. அவ்வுருபிற்கே
  வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார் ‘பேடையின் நினைவு’ என்று
  தொடங்கி. இப்பொருள் உயர்பின் வழித்து.

2. “உடன்மேயும் கருநாராய்” என்று விளிக்கிறவளுடைய வெறுப்பால்
  உண்டான மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘அதற்கு ஒரு குற்றம்’
  என்று தொடங்கி. குற்றமாவது, நான் உபவாசத்தால் இளைத்திருக்க,
  உங்களுக்கு ஆகாரம் மிடற்றுக்குக்கீழ் இழிவதே என்பது.

3. இப்படிச் சொன்னால் காரியம் செய்யுமோ? என்ன, ‘அடுகு வளத்தை’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். அடுகு வளம் - போனகப்
  பெட்டி.

4. அடுகுவளத்தைத் தடுப்பதுபோன்று, தடுக்கிறாளோ? என்ன, ‘தன் துயர் ஒலி’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

5. இப்படிச் சொல்லுகிறவளுடைய மனோபாவத்தை அருளிச் செய்கிறார்
  ‘பிரியாதார்க்கு’ என்று தொடங்கி.

6. ‘பலித்தபடி’ என்றது, தனக்குப் பலித்தபடியைத் தெரிவித்தபடி. அதனை
  விவரணம் செய்கிறார் ‘அங்கு உண்டான’ என்று தொடங்கி. என்றது,
  பறவைகள் ஆகையாலே, அவற்றுக்கு ஈடுபடுகைக்குத் தகுதி இல்லை
  என்றபடி.