முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
171

இருக்கிறவர்களுடைய வாசனையும் பொறுக்கமாட்டாத நித்திய சூரிகள், திரிவிண்ணகர் பூமியிலே ஆகையாலே இங்கே வந்து பொருந்தி வசிப்பர்கள். அப்படிப்பட்ட திருவிண்ணகரிலே நித்திய வாசம் செய்கிற உபகாரகன். பாவியேன்-“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே அவன் மேல் விழத் தாம் இறாய்த்த படியை நினைத்துப் ‘பாவியேன்’ என்கிறார். 1நித்தியசூரிகள் தன் பக்கலிலே வந்து மேல் விழ, அதனைத் தள்ளித் தான் என் பக்கலிலே வந்து மேல் விழாநிற்கக்கண்டீர்நான் ‘அல்லேன்’ என்றது. மனத்தே உறைகின்ற-இப்போது, நித்தியசூரிகளும் அந்த இருப்பும் கிடக்கக் கண்டீர் என் நெஞ்சிலே புகுந்து நித்தியவாசம் செய்யாநின்றான். பரஞ்சுடரே - தனக்குப் புறம்பே உண்டான வசிக்கும் இடங்கள் கிடக்க, என் நெஞ்சிலே புகுந்து நின்றது எனக்குக் காரியம் செய்தானாய் இருக்கையன்றிக்கே ‘தன்பேறு’ என்று தோற்றும்படி பேர்ஒளியன்ஆனான். 2என்றது, “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘இவரை இழக்கிறோமோ?’ என்று வந்த உறாவுதல் தீர, இவரைப் பெற்ற பின்பு அதனாலே “நின்றிலங்கு முடியினாய்!” என்கிறபடியே வடிவிலே பிறந்த வேறுபாடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.

(6)

581. 

    பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
    கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
    சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
    வரங்கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன்சரணே.

    பொ-ரை :-
பிரகிருதி சம்பந்தம் இல்லாத திருமேனியையுடையவனாயும், உலகத்தையே உருவமாகவுடையவனாயும், கண்களுக்கு வெளிப்படாது மறைந்தவனாயும், இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் செய்து கண்களுக்குத் தோன்றுகின்றவனாயும், அந்த அந்த அவதாரங்களில் பல ஆண்டுகள் நிலை பெற்று நிற்கின்றவனாயும், வஞ்சனையான காரியங்களைச் செய்கின்றவனாயும் இருந்து, தேவர்கள் தலைகளால் வணங்குகின்ற திருவிண்ணகரம் என்னும்

 

1. “பாவியேன்” என்றது, “மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியில்
  இறாய்த்தபடி நினைத்து என்பான் என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘நித்தியசூரிகள்’ என்று தொடங்கி.

2. மேலே கூறியதனை விவரணம் செய்கிறார் ‘என்றது’ என்று தொடங்கி.
  ‘நின்றிலங்கு’ என்பது, திருவாய். 6. 2 : 8.