New Page 1
றோம்’
என்று வணங்கும்படி திருவிண்ணகரிலே நிற்கிற உபகாரகன். வரம் கொள் பாதம் அல்லால் - 1எத்தனையேனும்
தண்ணியாரும் கிட்டலாம்படியான சிறப்புப் பொருந்திய திருவடிகள் அல்லது. யாவர்க்கும் வன்சரண்
இல்லை - எத்தனையேனும் 2கிழார் கிழார்க்கும் வலிய புகல் இல்லை. 3அவனை
ஒழிந்த சரண்யர் அனைவரும் இவனைக் கொண்டு முழுகும் பேர். இவனைக்கொண்டு கரை ஏறுதற்குத் தக்க
வலிய புகல் அவன் திருவடிகள் அல்லது இல்லை. 4அடியே பிடித்து ஜீவிக்கில் ஜீவிக்குமத்தனை.
(7)
582.
வன்சரண்
சுரர்க்காய் அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்த்
தன்சரண்
நிழற்கீழ்உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண்
திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என்சரண்
என்கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.
பொ-ரை :-
தேவர்கட்குச்
சிறந்த புகலிடமாகியும், அசுரர்கட்குக் கொடிய யமனாகியும், பெரியோர்களைத் தன்திருவடிகளின் நிழலிலேவைத்துக்
காப்பாற்றியும், பெரியோர் அல்லாதாரை அங்ஙனம் வைத்துக்காப்பாற்றாமலும், தெற்குத் திசைக்குப்
புகலிடமான திருவிண்ணகரம் என்னும் திவ்விய தேசத்திலே எழுந்தருளியிருக்கிற பிரான் என் கண்ணன்
என்னை ஆளுடைய என்னப்பன் எம்பெருமான் எனக்குப் புகலிடமாவான்.
வி-கு :-
சுரர்க்கு வன்சரண் ஆய் என்க. ஆய் வைத்தும் வையாதும் சேர்ந்த பிரானாகிய கண்ணன் என்க. கண்ணனாகிய
என்னப்பன் என் சரண் என்க. என்சரண் - எனக்குச் சரண்.
1. “வரம்” என்ற
சொல்லின் பொருளை விளக்குகிறார் ‘எத்தனையேனும்’
என்று தொடங்கி.
2. கிழார் கிழார்க்கும் - பெரியவர்க்கும் பெரியரானவர்கட்கும். கிழார் -
பெரியவர்.
3. “வன்சரண்” என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘அவனை ஒழிந்த’
என்று தொடங்கி. சரண்யர்
- புகலிடமானவர்.
4. ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘அடியே பிடித்து’ என்று தொடங்கி.
திருவடிகளையே பிடித்து
என்றும், முதலிலே பிடித்து என்றும் பொருள்.
|