முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
176

New Page 1

போல் அன்றியே, பத்து மாசம் வயிற்றிலேவைத்து நோக்கிப் பெற்ற தாயாய். பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பன் - வேறே இனிய பொருள்களாய்க் கொண்டு உபகாரகம் ஆவன சில பொருள்கள் உள; எனக்கு அப்பொருள்கள் எல்லாம் தானாய் நின்று உபகரித்தவன். மின்னப் பொன் மதிள்சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் - மின்னாநின்றுள்ள பொன்மதிளாலே சூழப்பட்ட திருவிண்ணகரிலே நின்ற உபகாரகன். தன் ஒப்பார் இல் அப்பன் - சிலர்க்கு ஒன்றைக் கொடுக்குமிடத்தில், தன்னோடு ஒக்கக் கொடுக்கவல்லார் இல்லாதபடியான மஹோபகாரகன். இதற்கு, 1‘மின்னிடை மடவார்’ என்ற திருவாய்மொழியிலே, அவன் மேல் வந்து விழ, ‘நீ எனக்கு வேண்டா’ என்று நான் தள்ளத் தள்ள, ‘நீ உனக்கு ஹிதம் அறிந்தாயோ? நான் உனக்கு வேணுங்காண் என்று தன்னை எனக்குத் தந்தவன்’ என்று சீயர் அருளிச்செய்வர். தன தாள் நிழல் தந்தனன் - 2‘உன்னை ஒழிந்த வெய்யிலே எனக்கு அமையும்’ என்று நான் அகலப் புக, “அழித்தாய் உன் திருவடியால்” என்று தன்னுடைய திருவடிகளாலே என் செருக்கைப் போக்கி, திருவடிநிழலை எனக்குத் தந்தான். 3அடிபட்டவாறே, ‘எனக்கு’ என்று வைத்தவற்றையும் பொகடுவர்களே.

(9)

584.

    நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
    சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
    மழலை வாய்வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னுபிரான்
    கழல்கள் அன்றி மற்றோர் களைகண்இலம்; காண்மின்களே.

 

1. “தன் ஒப்பார் இல் அப்பன்” என்பதற்கு, மற்றையோரைக் காட்டிலும்
  இவன் செய்த உபகாரம் எது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘மின்னிடை மடவார்’ என்று தொடங்கி.

2. “நிழல்” என்றதற்கு, எதிர்த்தட்டாக ‘வெய்யில்’ என்கிறார் ‘உன்னை ஒழிந்த’
  என்று தொடங்கி.

3. ‘திருவடிகளாலே என் செருக்கைப் போக்கினான்’ என்றதனை ரசோக்தியாக
  அருளிச்செய்கிறார் ‘அடிபட்டவாறே’ என்று தொடங்கி. திருவடிகள்
  என்றும், தண்டனை என்றும் பொருள்.