முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
178

New Page 1

வேறு ரக்ஷகத்தையுடையோம் அல்லோம். 1“என்னையே சரணமாகப் பற்று” என்னுமவன் அன்றிக்கே, திருவடிகள்தாமே தஞ்சம் என்பார் ‘கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம்’ என்கிறார். காண்மின்களே - இது 2அர்த்தவாதம் சொல்லுகிறேன் அல்லேன்; நீங்களும் பாருங்கோள் என்கிறார்.

(10)

585.

        காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த
        தாளிணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
        ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
        கோணைஇன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.

    பொ-ரை :-
உலகத்தீர்! இதனைக் காணுங்கோள் என்று கண்களுக்கு எதிரே வளர்ந்த திருவடிகளையுடைய சர்வேசுவரன் விஷயமாக, திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட, பகவானுடைய ஆணை உருவமாக இருக்கிற, ஆயிரம் திருப்பாசுரங்களுள் திருவிண்ணகரம் என்ற திவ்விய தேசத்தைப் பற்றிய இப்பத்துத் திருப்பாசுரங்களையும் வல்லவர்கள் ஒரு குற்றமும் இன்றி நித்தியசூரிகளுக்கு என்றும் கௌரவிக்கத் தக்கவர்கள் ஆவர்கள்.

   
வி-கு :- சடகோபன் சொன்ன திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார் விண்ணோர்க்கு என்றும் கோணை இன்றிக் குரவர்கள் ஆவர் என்க.

   
ஈடு :- முடிவில், இத்திருவாய்மொழி 3வல்லார் நித்தியசூரிகளுக்கு நாள்தோறும் கௌரவிக்கத் தக்கவராவர் என்கிறார்.

    காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த தாள் இணையன் தன்னை - 4‘உங்கள் தலைகளிலே நான் காலைவைக்கக்

 

1. “மன்னுபிரான் அன்றி”, “கழல்கள் அன்றி” என்றதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘என்னையே’ என்று தொடங்கி.

 
“மாமேகம் சரணம் வ்ரஜ”

  என்பது, ஸ்ரீ கீதை, 18 : 66.

  “மறுபிறப் பறுக்கும் மாசில் சேவடி”

  என்பது, பரிபாடல்.

2. அர்த்தவாதம் - புனைந்துரை.

3. “பத்தும் வல்லார் விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே”
  என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

4. “கண்முகப்பே நிமிர்ந்த” என்னாமல், “காண்மின்கள் உலகீர்” என்று
  விசேடித்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘உங்கள் தலைகளிலே’
  என்று தொடங்கி.