முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
181

வனத

வனத்தில் நடந்த செயல்களைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, அவை இறந்தகாலத்தில் நடந்த செயல்கள் போலத் தோற்றுகை அன்றிக்கே, சமகாலத்தில் நடக்கும் செயல்போலே தோற்றக் கிட்டி நின்று அனுபவிக்கிறார்.

    1
“மின்னிடை மடவார்” என்ற திருவாய்மொழியிலே, ‘அல்லோம்’ என்று அகன்று முடிந்து போகப் புக்க தம்மை ‘ஆவோம்’ என்னச் செய்து சேரவிட்டுக் கொண்டபடியை நினைத்து, இப்படி வல்லார் இவன் அல்லது இலர்கண்டீர் என்று தலைக்கட்டுகிறாராயிருக்கிறது. 2“சன்மம் பலபல” என்ற திருவாய்மொழியிலும் இப்படி இருப்பது ஓர் உவகை உண்டே; அதற்கும் இதற்கும் வாசி என்? என்னில், அங்கு, இதர வியாவிருத்தி மாத்திரத்தால் உண்டான ஞான லாபத்தால் உண்டான உவகை; இங்கு, அவன், தன் குணங்களை நேரே இவரை நெருங்கி அநுபவிப்பிக்க, தம்வசப்பட்டவர் அல்லாதபடி அநுபவித்து உவகையராய் வாய்விடுகிறார்.

586

    குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம்ஒன்று ஏந்தியதும்
    உரவுநீர்ப் பொய்கைநாகங் காய்ந்ததும் உள்பட மற்றும்பல 
    அரவில் பள்ளிப் பிரான்தன் மாயவினைகளையே அலற்றி
    இரவும் நன்பகலும்3 தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.

    பொ-ரை :-
ஆய்ச்சியரோடு குரவைக்கூத்தினைக்கோத்து விளையாடியதும், கோவர்த்தனம் என்னும் மலையை ஏந்திக் குடையாகப் பிடித்ததும், வலிய தண்ணீரையுடைய பொய்கையிலே கிடந்த காளிங்கன் என்னும்

 

1. மின்னிடை மடவாரோடு இதற்கு இயைபு யாது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘மின்னிடை மடவார்’ என்று தொடங்கி.
  ‘தலைக்கட்டுகிறாராயிருக்கிறது’ என்றது, “நல்குரவும்” என்ற
  திருவாய்மொழியிலே தலைக்கட்டுகிறாராயிருக்கிறது என்றபடி. மின்னிடை
  மடவார்க்கும் இதற்கும் நேரே இயைபு. “நல்குரவும்” என்ற திருவாய்மொழி
  பிராசங்கிகம்.

2. மேலேயும் இப்படிப்பட்ட உவகை உண்டே; அதற்கும் இதற்கும் வாசி யாது?
  என்கிற சங்கையை அநுவதித்துப் பரிஹரிக்கிறார் “சன்மம் பலபல” என்று
  தொடங்கி. ‘இதர வியாவிருத்தி’ என்றது, “சொன்னால் விரோதம்” என்ற
  திருவாய்மொழியில் திருந்தாத சம்சாரிகளில் தமக்கு உண்டான வேறுபாடு
  என்றபடி.

3. “தவிர்கிலம் என்ன குறை நமக்கே” என்பதும் பாடம்.