ன
னானவனைப் படுக்கையாகக்
கொண்டான். 1இவன்தான் பலபல முகமாக அநுகூலிக்கும்; அவனும் பலபல முகமாக அடிமை
கொள்ளும். 2ஆயிரம் பைந்தலை அனந்தன் அல்லனோ.
அரவில் பள்ளிப்
பிரான் - 3அவதாரங்களுக்கு அடி திருப்பாற் கடலாகையாலே அதனைச் சொல்லுதல்; அன்றியே,
4“நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்” என்றதனை நினைக்கிறாராதல். தன்மாய வினைகளையே
அலற்றி - அவனுடைய ஆச்சரியமான செயல்களையே வாய்விட்டுத் துதிசெய்து. இரவும் நன்பகலும் தவிர்கிலன்-பகவானுடைய
அநுபவத்திற்கு உறுப்பாகாத அன்றே அன்றோ 5சுடர்கொள் இராப் பகலாக இருப்பது;
அநுபவத்திற்குத் தக்கதான காலமாகையாலே, நல்ல இரவும் நல்ல பகலும் என்கிறார். பிரிந்த
காலத்திலே அன்றோ நெருப்பை உருக்கி ஏறட்டினாற் போலே இருப்பது, என்ன குறைவு எனக்கே -
6“அங்குக் காலம் பிரபுவாய் இல்லை” என்றுகொண்டு பகலும் இரவும் நடையாடாதது ஒரு தேசவிசேடம்
தேடி அநுபவிக்கைக்குப் பட்டைப் பொதிசோறு கட்ட வேண்டும்படி குறைவாளனாயிருந்தேனோ? ஒரே தன்மையதான
அநுபவம் அன்றோ அங்கு உள்ளது; 7பல இருதுக்களில் விளையாடினார்” என்கிறபடியே, அந்த
அந்தக் காலங்கள் தோறும் உண்டான
1. இவன் அநுகூலிக்கும் பிரகாரம்
யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இவன்தான்’ என்று தொடங்கி. இவன் பல் பல முகமாக
அடிமை செய்கையாலே, அவனும் பல பல முகமாக அடிமை கொள்ளும்
என்கிறார் ‘அவனும் பல பல’ என்று தொடங்கி.
2. அவனுக்குப் பல முகங்கள்
உண்டோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘ஆயிரம்’ என்று தொடங்கி. இது, பெரியாழ்வார்
திருமொழி, 4. 3 : 10.
3. கிருஷ்ணாவதாரம் அல்லது
பேசாதிருக்கிற இவர் திருப்பாற்கடல்
நாதனைச் சொல்லுவான் என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அவதாரங்களுக்கு’ என்று தொடங்கி.
4. இது, திருவாய். 5. 10
: 11.
5. இது, திருவாய். 2. 1 :
4. “சுடர்கொள்” என்பதற்குப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘பிரிந்த காலத்தில்’ என்று தொடங்கி.
சுடர் - நெருப்பு.
6. “காலம் ஸபசதே தத்ர ந
கால: தத்ரவை ப்ரபு:”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. பட்டைப்பொதி
சோறு - பாக்குப் பட்டையில்
கட்டுகிற சோறு.
7. “விஜஹார பஹூந் ருதூந்”
என்பது, ஸ்ரீராமா. பால. 77
: 25.
|