New Page 1
கும் பசுமேய்க்கைக்கும்
ஒன்றே பரிகரம். 1குழலை ஊதவே பசுக்கள் வயிறு நிறையும். 2சக்கரவர்த்தித்
திருமகனுக்கு வில் கைவந்திருக்குமாறுபோலே யாயிற்று, கிருஷ்ணனுக்குக் குழல் கைவந்திருக்கும்படி. கெண்டை
ஒண் கண்வாசம் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் - 3கரனைக் கொன்ற அன்று,
பிராட்டி “கணவனை ஆலிங்கனம் செய்தாள்” என்னும்படி அணைத்தாற் போலே யாயிற்று, பசுமேய்த்து
வந்த சிரமம் எல்லாம் போகும்படி நப்பின்னைப் பிராட்டி இளமை பொருந்திய அழகிய திருக்கண்களாலே
குளிர நோக்கி அழகிய திருக்குழலின் பரிமளத்தாலே திருமேனியை வாசனையுடைய தாம்படி ஆக்கித் தன்
தோள்களோடே அணைத்ததுவும். கெண்டை ஒண்கண் - கெண்டை போலே மிக இளமையினையுடையனவாய், அமிருதத்தைப்
பெய்தாற்போலே குளிர நோக்குகிற திருக்கண்கள். வாசம் பூங் குழல் - 4வாசம் செய்
பூங்குழலிற் காட்டிலும் பொலிவையுடைத்தான தன்னே்ற்றமுடைய குழலையுடையவள். பின்னை தோள்கள்
மணந்ததும் - அவளுடைய தோள்களுடனே கலந்ததுவும். மணத்தல் - கலத்தல். 5“தோளி”
என்கிறபடியே, இவளுக்கு அழகு 6கைவிஞ்சியிருக்குமே.
1. குழல் ஊதுதல்
பசுமேய்க்கைக்குப் பரிகரம் ஆகுமோ? என்ன, ‘குழலை’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
2. குழலை ஒழிய வேறு கருவி
இல்லையோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்று தொடங்கி.
3. “நிரைமேய்த்ததும்” என்றதனையும்
கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்
‘கரனைக்கொன்ற’ என்று தொடங்கி.
“தம் த்ருஷ்டவா சத்ருஹந்தாரம்
மஹர்ஷீணாம் ஸுகாவஹம்
பபூவ ஹ்ருக்ஷ்டா வைதேஹீ
பர்தாரம் பரிஷஸ்வஜே”
என்பது, ஸ்ரீராமா. ஆரண். 30 : 39.
4. வாசம் செய்கிற குழல்
என்னாமல், “வாசப்பூங்குழல்” என்கையாலே,
பிராட்டியினுடைய திருக்குழலைக்காட்டிலும் நப்பின்னைப்பிராட்டியின்
திருக்குழலுக்கு ஏற்றம் உண்டு என்கிறார் ‘வாசம்செய்’ என்று தொடங்கி.
இது, திருவாய். 10. 10
: 2.
5. மற்றைய அவயவங்கள்
இருக்க, “தோள்களை” விசேடித்ததற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘தோளி’ என்று தொடங்கி.
இது, திருவாய். 4. 2 : 5.
6. கை
விஞ்சியிருக்கும் - தோளாலே விஞ்சி இருக்கும் என்றும்,
அதிகமாயிருக்கும் என்றும் இருபொருள்.
|