ச
சாஸ்திரங்களைப்
பேசுகின்ற ஒலியும் கடல் ஒலி போலே இருக்கிற, சிரமத்தைப் போக்குகிற ஊர். ஞாலம் எல்லாம்
உண்ட நம்பெருமானைக் கண்டு - அம்முதன்மையோடேகூட வந்தானாகில் அங்குத்தை உதவாமையும் கிடக்குமோ?
என்னில், அங்ஙனன்று; 1தளர்ந்தார் தாவளம் என்கிறது. ஆபத்திற்குத் துணைவன் அன்றோ.
ஆபத் ரக்ஷகனான செயலைக்காட்டி என்னைத் தனக்கே உரியவனாக எழுதிக்கொண்டவன் என்பாள் ‘ஞாலம்
எல்லாம் உண்ட நம்பெருமான்’ என்கிறாள்.
பாதம் கைதொழுது
- கண்டு, திருவடிகளிலே தண்டன் இட்டு. 2“‘கைகள் கூப்பி’ என்றதே; தொழுதார்க்கு நிற்க
ஒண்ணாதே யன்றோ. உண்ணாநிற்க, மிடற்றைப் பிடித்தாற் போலே இருப்பது ஒன்று அன்றோ தொழுதுவைத்து
விழாதே ஒழியுமது” என்று பூர்வர்கள் நிர்வஹிப்பர்கள். 3“மதித்தான் ஒரு
ஸ்ரீவைஷ்ணவன் ஸ்ரீபாதத்தே தலைபடத் தண்டன் இட்ட அன்று, எனக்கு உண்டு பசி கெட்டாற்போலே
இருக்கும்” என்று அருளிச்செய்வர் சீயர். அன்றிக்கே, கிலாம்தோற்றும்படி அவர் திருவடிகளிலே
கைசென்று தாக்கும்படி விழுந்து கிடவுங்கோள் என்னுதல்; என்றது, தீர்க்கப் பிரணாமம் பண்ணுங்கோள்
என்றபடி. பணியீர் - 4அவனைக்கிட்டி நின்று, பிரணயரோஷத்தாலே ‘நீ, நான்’ என்று
சொல்லுமவையெல்
1. தளர்ந்தார் தாவளம் -
தளர்ந்தவர்கட்கு ரக்ஷகம். தளர்ந்தார்கட்குத்
தாவளமாயிருப்பவன் என்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்
“ஆபத்திற்குத்
துணைவன்” என்று.
2. “கைகள் கூப்பி”
என்றது, மேல் திருப்பாசுரத்தில்.
3. திருவடிகளிலே
தண்டன் இடுவது, உண்டதுபோலே தாரகமாயிருக்கும்
என்னுமதற்கு ஐதிஹ்யம் காட்டுகிறார் ‘மதித்தான்’
என்று தொடங்கி.
4. சொல்லீர் என்னாமல்,
“பணியீர்” என்றதன் பாவத்தை அருளிச் செய்கிறார்
‘அவனைக்கிட்டி’ என்று தொடங்கி. என்றது,
நாயகனைப் பிரணய
ரோஷத்தாலே ‘நீ, நான்’ என்று சொல்லுவது போன்று, உத்தேசியரான
ததீயரைச்
சொல்லலாகாது என்றபடி.
“மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்
நினையுங்
காலைப் புலவியுள் உரிய”
என்பது, இலக்கணம். தொல்.
பொருள். 227.
|