கடவத
கடவதானால் எனக்கு எங்கே
ஒப்பு? 1ஆகாசவாயர் எனக்கு எதிரோ! வாய் - இடம். பரமாகாசம் என்கிற பரமபதமாகிற
இடத்திலுள்ளார்தாம் எனக்கு ஒப்பாரோ!! உலகம் என்பது, உயர்ந்தோராகையாலே நித்திய சூரிகள்
என்றபடி.
(2)
588.
நிகரில் மல்லரைச்செற்றதும்
நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மாகளிறு அட்டதும்
இவைபோல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப்
பிரான்தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன்
எனக் கென்னினி நோவதுவே?
பொ-ரை :-
ஒப்பு இல்லாத மல்லர்களைக் கொன்றதும்,
பசுக்களை மேய்த்ததும், நீண்ட நெடிய கையையுடைய மலைபோன்ற பெரிய குவலயாபீடம் என்னும் யானையைக்
கொன்றதும், இவற்றைப் போன்றவையும் பிற செயல்களுமான, பேரொளிப்பிழம்பின் மயமான திருமேனியையுடைய
கண்ணபிரானது செயல்களை நினைந்து, புலம்பி என்றும் அநுபவிக்கும்படியாக நாள்கள் கழியப்பெற்றேன்;
யான் இனி எதற்கு வருந்தவேண்டும்?
வி-கு :-
போல்வனவும் பிறவுமான செய்கை என்க. நினைந்து
புலம்பி என்றும் நுகர வைகல் வைகப் பெற்றேன் என்க. வைகப்பெற்றேன் - கழியப் பெற்றேன்.
ஈடு :- மூன்றாம்
பாட்டு. 2கிருஷ்ணனுடைய செயல்களையே அநுபவித்துக்கொண்டு காலம் போக்கப்பெற்ற
எனக்கு ‘இன்னது பெற்றிலேன்’ என்று நோவ வேண்டுவது இல்லை என்கிறார்.
நிகர் இல் மல்லரைச்
செற்றதும் - மிடுக்குக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கும் மல்லரைச் செற்றதும். 3பால்
வெண்ணெய் இவற்றை உண்கையாலே மிருதுத் தன்மையராய் இருப்பார் இரண்டு பிள்ளைகள் அல்லரோ;
மாமிச பக்ஷணங்களாலும் சஸ்திர அஸ்திர சிக்ஷைகளாலும் மலைகள்போலே திண்ணியவான தோள்
1. ஆகாசவாயர் - ஆகாசத்தை
நோக்கி வாயைத் திறந்துகொண்டிருப்பவர்கள்
என்பது ஒருபொருள்; தரித்திரர் என்றபடி. ‘ஆகாசவாயர்’
என்பதற்கு, நேர்
பொருளை அருளிச்செய்கிறார் ‘வாய்’ என்று தொடங்கி.
2. “நுகர வைகல் வைகப் பெற்றேன்”
என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
3. “நிகரில்”
என்கையாலே, இவர்களை வென்றது ஆச்சரியம் என்கிறார்
‘பால்வெண்ணெய்’ என்று தொடங்கி.
|