முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
191

களையுடைய மல்லரைப் பொடிபடுத்தினார்கள்; 1புழுக்குறித்தது எழுத்தானாற்போலே இங்ஙனே வாய்த்துக்கொண்டு நிற்கக்கண்ட தித்தனை. 2இல்லையாகில், இளைஞர் சிலருடைய செயல்களாக மாட்டாதே அன்றோ. 3“ஒவ்வாத போர் என்று கூறினர்” என்கிறபடியே எல்லாரும் அஞ்சும்படி அன்றோ அற்றைச் செயல். 4‘ஏவிற்றுச் செய்வான் ஏன்று எதிர்ந்து வந்த மல்லரை’ - தாமாகவே வந்து மேல்விழுந்தால் அன்றோ ‘முடியாது’ என்று வாங்கலாவது? கம்சனுக்குப் பரதந்திரர்களாய் வருகையாலே இங்குத் தோற்றார்களாகில் அவன் அங்கே தோள்களைக் கழிக்குமாயிற்று; ஆனபின்பு, ‘கோழைகளாய்க் கொலையுண்பதில் புகழோடே முடிய அமையும்’ என்று மேலிட்டார்கள். ‘சாவத் தகர்த்த சாந்து அணி தோள் சதுரன்’ - 5கூனி சாத்திவிட்ட சாந்து குறியழியாமலே காணும் அவர்களோடு போர்த் தொழில் செய்தது. 6மல்லரோடே கூட எல்லா அவயவங்களும் பொருந்தி போர்த் தொழில் செய்ய நிற்கச்செய்தே, சாத்தின சாந்து குறி

 

1. இளைஞரானால் அவர்கள் பொடி படும்படி யாங்ஙனம்? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘புழுக்குறித்தது’ என்று தொடங்கி. இதனைக்
  குணாக்ஷர நியாயம் என்பர். “மானத்து வண்டல் உழ ஓர் எழுத்தின்
  வடிவுற்ற சீர்மான” என்பது, திருவரங்கத்தந்தாதி.

2. ‘வாய்த்துக் கொண்டு நிற்கக் கண்டதித்தனை’ என்னவேண்டுமோ? இவர்கள்
  கொன்றார்கள் என்ன ஒண்ணாதோ? என்ன, ‘இல்லையாகில்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

3. “ந ஸமம் யுத்தம் இத்யாஹு:”
 
  என்பது, ஸ்ரீராமா. யுத். 103 : 6.

4. கம்சனுடைய ஏவலால் வருகையாலும் அவர்களைக் கொல்லுதல் முடியாத
  காரியம் என்று கொண்டு அதற்குப் பிரமாணம் காட்டி, அப்பிரமாணப்
  பாசுரத்திற்குப் பொருளும் அருளிச்செய்கிறார் ‘ஏவிற்று’ என்ற தொடங்கி.
  இது, பெரியாழ்வார் திருமொழி, 4. 2 : 6. “ஏவிற்றுச் செய்வான்” என்றதற்குப்
  பொருள் அருளிச்செய்கிறார் ‘தாமாகவே வந்து’ என்று தொடங்கி.

5. “சாவத் தகர்த்த” என்றதன்பின், “சாந்து அணிதோள் சதுரன்”
  என்கையாலே, வியாக்கியாதாவின் ஈடுபாடு: ‘கூனிசாத்திவிட்ட’ என்று
  தொடங்கும் வாக்கியம்.

6. மேல் எழுந்த வாரியாக அவர்களோடு போர் செய்தமையால் சாந்து
  அழியாமல் இருந்தது என்றாலோ? எனின், அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘மல்லரோடே கூட’ என்று தொடங்கி.