முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
194

New Page 1

குறுகுவது ஆகாத இடந்தேடி அநுபவிக்கப் பெற்றிலேன்’ என்கிற அதிருப்தியுண்டோ எனக்கு என்கிறார். 1அன்றிக்கே, அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது; அது கழியப் பெற்ற தன்றோ என்னுதல். 2இவர் நோவு போக்கும் அவனுக்கு வரும் நோவன்றோ, இவர்க்கு நோவாவது: அது போகவே இவர்க்கு நோவு போயிற்றதாமன்றோ. உயிருக்கு வரும் நோவு உடம்புக்கு வரும் நோவாமன்றோ.

(3)

589

    நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்
    சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
    தேவக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
    மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?


    பொ-ரை :-
யசோதைப் பிராட்டி நோவும்படி உரலோடு இழுத்துக் கட்ட அச்சத்தால் அழுததும், வஞ்சனை பொருந்திய பூதனையானவள் இறக்கும்படி பாலினை உண்டதும், ஊர்ந்து வந்த சகடாசுரன் இறக்கும்படி உதைத்ததுமான, அழகிய தேவப்பிரானுடைய செயல்களை நினைந்து மனம் குழைந்து இச்செயல்களோடே மனம் பொருந்தும்படி காலங்கள் கூடப் பெற்றேன்; இனி, எனக்கு வேண்டுவது என்?

    வி-கு :- நோவ ஆர்க்க இரங்கிற்று என்க. பெண்ணை : வேற்றுமை மயக்கம். பெண்ணானவள் என்பது பொருள். சாடியதுமான செய்கை என்க.

    ஈடு :- நான்காம் பாட்டு. 3தன்னை அடைந்தவர்கட்குத் தான் பவ்யனாயிருக்கும் இருப்பிலே பிரதிகூலரை மாய்த்த கிருஷ்ணனை அநுபவிக்கப்பெற்ற எனக்கு அடையத்தக்கது ஒன்று உண்டோ என்கிறார்.

    ஆய்ச்சி உரலோடு நோவ ஆர்க்க இரங்கிற்றும் - 4சீயர், இத் திருப்பாசுரத்தை இயல் அருளிச்செய்ய புக்கால் “நோவ”

 

1. “நிகரில் மல்லரைச் செற்றதும்” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து
  வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.

2. அவனுடைய நோவு இவரதாகுமோ? என்ன, அதற்கு இரண்டு வகையாக
  விடை அருளிச்செய்கிறார் ‘இவர் நோவு’ என்று தொடங்கியும், ‘உயிருக்கு
  வரும்’ என்று தொடங்கியும்.

3. “நோவ” என்பது போன்றவைகளையும், “வஞ்சப் பெண்ணை” என்பது
  போன்றவைகளையும், “எனக்கு என் இனி வேண்டுவது” என்றதனையும்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

4. பிராசங்கிகமாக, ‘சீயர்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ‘நோவ
  என்று அருளிச்செய்யும் அழகு காணும்’ என்றது, சீயர், “நோவ”