என
என்று அருளிச்செய்யும்
அழகு காணும். ‘நோவ என்கிறார் காணும் ஆழ்வார், தம் திருமேனியிலே கயிறு உறுத்தினாற்போலே.’
1ஒரு துவேஷம் உண்டாய்க் கட்டுகிறாள் அல்லளே, சிநேக காரியமான கோபமாகையாலே
சிநேகமுள்ள அளவும் இடைநிற்கும் அன்றோ கோபமும். தாய் எடுத்த சிறுகோலுக்கு உளைந்து ஓடியன்றோ,
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான்; வாய்விட்டு அழமாட்டாதது அன்றோ இவரை வருத்துகிறது.
2“தறியார்ந்த கருங்களிறே போல நின்று தடங்கண்கள் பனிமல்கும் தன்மையானை” என்கிறபடியே,
ஒரு மத்தயானையைத் தறியோடே சேர்த்தாற்போலே காணும் இவன் கட்டுண்டு நின்ற நிலை. ஓர் அபலை
கட்டின கட்டு அவிழ்த்துக்கொண்டு போகமாட்டாதே, நின்று அழுகையே இயல்பாய் இருந்தபடி. 3“வல்லையாகில்
போய்க் காணாய்” என்றாள் அன்றோ. உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் - உரலோடே கட்ட இரங்கிற்றும்.
4துரியோதனாதியர்களுடைய கட்டாகில் அன்றோ
என்று ஈடுபட்டு அநுசந்திக்கும்போது
கேட்க நன்றாக இருக்கும் என்று நம்
பிள்ளை அருளிச்செய்வர் என்றபடி. சீயர் ஈடுபட்டதற்கு, பாவம்
அருளிச்
செய்கிறார் ‘“நோவ” என்கிறார் காணும்’ என்று தொடங்கி.
1. பிரியமுடைய தாய் நோவக்
கட்டுவான் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘ஒரு துவேக்ஷம்’ என்று தொடங்கி. இடை நிற்கும்
- ஒத்திருக்கும். என்றது, எவ்வளவு சிநேகம் உண்டு, கோபமும் அதற்கு
ஒத்திருக்கும் என்றபடி. இதனால்,
கோபத்தின் மிகுதியினாலே நோவக்
கட்டினாள் என்னுதல்; தாய் மெதுவாகக் கட்டினாலும் பொறுக்க
ஒண்ணாமையாலே நோவாயிருக்கும் என்னுதல்.
2. பிரிய முள்ள தாய் பரிபவித்ததற்குப்
பொறுக்கமாட்டாமல் வேறு
பட்டவனாய் இருந்த தன்மைக்குத் திருமொழியிலிருந்து பிரமாணங்கள்
மூன்றுகாட்டுகிறார்
“தாய் எடுத்த”, “விளியா ஆர்க்க”, “தறியார்ந்த” என்று
தொடங்கி. “தாய் எடுத்த” என்பது, பெரிய
திரு. 8. 3 : 5. “விளியா ஆர்க்க”
என்றது, பெரிய திரு. 6. 7 : 4. “தறியார்ந்த” என்பது, பெரிய
திரு. 2. 10. 6.
வாய்விட்டு அழாமல் விம்மி அழுதற்குப் பிரமாணம், “தறியார்ந்த” என்பது.
3. அவிழ்த்துக்கொண்டு
போகமாட்டாமல் இருந்ததற்குப் பிரமாணம்,
‘வல்லையாகில்’ என்று தொடங்குவது.
“யதி ஸக்நோஷி கச்ச த்வம்
அதி சஞ்சல சேஷ்டித”
என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 6 :
15.
4. இரங்குவான்
என்? அவிழ்த்துக்கொண்டு போக ஒண்ணாதோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘துரியோதனாதியர்களுடைய’
என்று
தொடங்கி.
|