அறுக
அறுக்க விரகு சிந்திப்பது.
இரங்கிற்றும் - மானசபீடையை அநுசந்தித்தபடி. இரக்கம் - ஈடுபாடு.
வஞ்சப் பெண்ணைச்
சாவப் பால் உண்டதும் - 1கெட்டேன்! பேய்த்தாய்பக்கலிலும் அங்ஙன் அருந்தானாகில்
என்படக் கடவது தான்? 2சூர்ப்பணகியைப் போலே அங்கத்தைக் குறைத்துப் பூசலை
விளைப்பியாதே முடித்துவிட்டானாதலின் ‘சாவ’ என்கிறார். 3யசோதைப்பிராட்டியின்
முலை உண்ணும்போதும் தான் உயிர்பெற உண்ணுமாறுபோலே காணும், இவள் முலை உண்கிறபோதும் தான் உயிர்பெற
முலையுண்டபடி; ஆதலின், ‘உண்டதும்’ என்கிறார். பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி உண்ட
வாயான் அன்றோ; 4இவன் பிள்ளையாயே முலை உண்டானத்தனை; பொருளின் இயல்பாலே பிரதிகூலர்
முடிந்ததித்தனையன்றோ. ஊர் சகடம் இறச்சாடியதும் - 5தூண்டுகின்றவர்கள் வேண்டாதபடி
தானே வந்து நலிந்தபடி. ஒரு மனிதவடிவு கொண்டு வந்து நலியிலன்றோ தடுக்கலாவது. இத்தால்
சொல்லிற்றாயிற்று, வேறு துணை வேண்டாமலே பாதகமாகும் தன்மையில் உறைப்புச் சொன்னபடி. இறச்சாடியதும்
- 6“தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்
1. “வஞ்சப்பெண்ணை” என்கிறவருடைய
மனோபாவத்தை அருளிச் செய்கிறார்
‘கெட்டேன்’ என்று தொடங்கி. ‘அங்ஙன் இருந்தானாகில்’ என்றது,
தாய்
பக்கல் போலே இருந்தானாகில் என்றபடி.
2. “சாவ” என்றதற்குக்
கருத்து அருளிச்செய்கிறார் ‘சூர்ப்பணகியை’ என்று
தொடங்கி.
3. “உண்டதும்” என்பதற்கு
ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘யசோதைப்
பிராட்டி’ என்று தொடங்கி. உயிர் பெற உண்டதற்குப்
பிரமாணம்
காட்டுகிறார் ‘பெருமுலையூடு’ என்று தொடங்கி. இது பெரிய திரு. 1, 3 : 1.
4. இவன் குழந்தையாய் முலை
உண்டால் அவள் முடியக் கூடுமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவன் பிள்ளையாயே’ என்று
தொடங்கி.
“புகர்கொள் வானவர்கள்
புகலிடந் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை”
என்பது, ஈண்டு அநுசந்தேயம்.
(திருவாய்.
8. 4. 8.)
5. “ஊர்” என்றதற்குக்
கருத்து அருளிச்செய்கிறார் ‘தூண்டுகின்றவர்கள்’ என்று
தொடங்கி. இதனால் பலித்த பொருளை
அருளிச் செய்கிறார் ‘இத்தால்’
என்று தொடங்கி.
6. முறியச்
சாடினதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘தளர்ந்தும்’ என்று
தொடங்கி. இது, திருவாய். 6. 9 :
4.
|