முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
199

யன

யன்றோ. பிறந்ததும் வீங்கு இருள்வாய் - 1“எல்லா உலகங்கட்கும் ஆதாரனான ஸ்ரீ கிருஷ்ணன் நடு இரவில் அவதரித்தார்” என்னும் படி அன்றோ. 2‘இவனும் விழுக்காடு அறியாதே அகப்பட்டுக் கொடு நின்றான், கம்ச பயமும் ஏற்பட்டதாயிரா நின்றது, இருளாலே அன்றோ நாம் பிழைத்தது. இனி, இந்த இருளைச் சரணம்புகுமித்தனை அன்றோ’ என்று பிள்ளையுறங்காவில்லிதாசர் பணிப்பாராம். 3“ஊர் எல்லாம் துஞ்சி” என்ற திருவாய்மொழியில், கூற்றமான இருள், இப்போது இவர்க்கு ஆதாரத்துக்கு விஷயமாயிற்று அன்றோ. 4வீங்கு இருள்வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப்போய் என்று கூட்டுக. 5“மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள்” என்கிறபடியே, பெற்றுப் பெற்று இழந்தவள் ஆகையாலே, இவனையும் இழக்கிறோமோ! என்று விரகபயத்தாலே, காலைப் பூண்டு கிடந்து கூப்பிடப்போய். 6பிள்ளை பக்கல் அன்பினாலே இவள் கூப்பிட, இவன் முலைச்சுவடு அறியாமையாலே போனபடி. வீங்கு இருள் - வளர்கிற இருள்.

 

1. வளருகிற இருளிலே பிறந்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘எல்லா
  உலகங்கட்கும்’ என்று தொடங்கி.

  “மத்யராத்ரே அகிலாதாரே ஜாயமாநே ஜநார்தநே
   மந்தம் ஜகர்ஜு: ஜலதா: புஷ்பங்ருஷ்டி முசோ த்விஜ”

  என்பது, ஸ்ரீ விக்ஷ்ணுபுரா. 5. 3 : 7.

2. “வீங்கு இருள்” என்று விசேடித்ததற்குக் கருத்து அருளிச்செய்கிறார்
  ‘இவனும்’ என்று தொடங்கி. விழுக்காடு - மேல் வரும் காரியம்.
  ‘சரணம்புகுமித்தனை’ என்றது, இருளை உத்தேசியமுள்ளதாகப் புத்தி
  பண்ணி வணங்கு மித்தனை என்றபடி.

3. “ஊரெல்லாம்” என்ற திருவாய்மொழியிலே வருகின்ற “வீங்கிருளின்
  நுண்துளியாய்” என்று இருளுக்கு அஞ்சினபடியையும், இப்போது
  கொண்டாடுகிறபடியையும் நினைத்து வியாக்யாதா ஈடுபடுகிறார்
  ‘ஊரெல்லாம்’ என்று தொடங்கி.

4. “வீங்கிருள்வாய்ப் பிறந்ததும்” என்றும், “வீங்கிருள்வாய்ப் புலம்பப் போய்ப்
  புக்கதும்” என்றும், “வீங்கிருள்வாய்” என்றதனை இடை நிலைத் தீவகமாக
  முன்னும் பின்னும் கூட்டுக.

5. காலைப் பூண்டு கொண்டு புலம்புகைக்குக் காரணம் யாது? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘மக்கள்’ என்று தொடங்கி. இது, பெரியாழ்வார்
  திருமொழி, 5. 3 : 1. காலைப் பூண்டு - கிருஷ்ணனுடைய திருவடிகளைப்
  பிடித்து.

6. இவள் கூப்பிடுவதற்கும், அவன் போனதற்கும் காரணத்தை
  அருளிச்செய்கிறார் ‘பிள்ளை பக்கல்’ என்று தொடங்கி. சுவடு - இனிமை.