ல
லாம் சொல்ல ஒண்ணாதன்றோ
இவர்கள் முன்பு இவர்கள்பக்கல் உபசாரத்தில் குறையாமற்சொல்லுகிறபடி அடியேன் - உங்களைக் கொண்டு
அழைப்பித்துக் கொள்ள இருக்கிறவனுக்கு அன்று; அத்தலையால் வந்த இழவு நீக்கி அவனோடே சேர்க்க
இருக்கிற உங்களுக்கு அடியேன் என்கிறாள். 1“எந்த நாதமுனிகளுடைய திருவடிகளானவை இம்மை
மறுமை இரண்டிலும் எப்போதும் என்னைக் காப்பாற்றும் பொருளாக இருக்கின்றனவோ” என்கிறபடியே.
அடியேன் திறமே 2அவன் திறம்போல் அன்று. என் இடையாட்டத்தைச் சொல்லுங்கோள்;
சொல்லில் ஒரு மஹாபாரதத்துக்குப் போருமாகாதே.
(2)
555
திறங்களாகி எங்கும் செய்க
ளூடுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வமல்கு திருவண்வண்டூ
ருறையும்
கறங்கு சக்கரக்கைக்
கனிவாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது
பணியீர் அடியேன் இடரே.
பொ-ரை :- திறம் திறமாக
எல்லா இடங்களிலும் வயல்களின் மத்தியிலே சஞ்சரிக்கின்ற கூட்டமான பறவைகளே! சிறந்த செல்வம்
மிகுந்திருக்கின்ற திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கின்ற, சுழலுகின்ற சக்கரத்தைத் தரித்த திருக்கரத்தையும்
கோவைக்கனி போன்ற திருவாயினையுமுடைய பெருமானைக் கண்டு தாழ்ந்து தொழுது அடியேனுடைய துன்பத்தைச்
சொல்லுங்கோள்.
வி-கு :-
செய்கள் ஊடு எங்கும் திறங்களாகி உழல் புள் என்க. புள்ளினங்காள்: திருவண்வண்டூர் உறையும்
பெருமானைக் கண்டு இறங்கித் தொழுது அடியேன் இடரைப் பணியீர் என்க. ஊடு - உள்ளுமாம். கறங்கு -
சுழலுகின்ற. இறங்கி - தாழ்ந்து
1. ததீயருக்குச் சேஷம் என்னுமதற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘எந்த
நாதமுனிகளுடைய’ என்று தொடங்கி.
“நாதாய நாதமுநயே
அத்ர பரத்ரசாபி
நித்யம் யதீய
சரணௌ சரணம் மதீயம்”
என்பது, ஸ்தோத்திர ரத்நம்
2.
2. “அடியேன்” என்பதனைத்
திருவுள்ளம்பற்றி, ‘அவன் திறம்போல் அன்று’
என்கிறார். திறம் - செயலும், வியசனங்களும்.
இடையாட்டம் - செயல்.
|