இன
இனி, இதனை முறித்துக்
காரியம் கொள்ளுவோம் என்று பொடிபடுத்தினான். உட்பட மற்றும் பல - இப் புடையிலே பகைவர்களை
அழித்தல் பலவே அன்றோ. அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே - பரப்பையுடைத்தான
பூமியடங்கலும் வருத்தம் இன்றி வளர்ந்து அளந்த ஆச்சரியத்தையுடையனான உபகாரகனுடைய ஆச்சரியமான
செயல்களையே. பகல் இராப்பரவப் பெற்றேன் - 1நாட்டார் அபிமத விஷயங்களை அநுபவிப்பதற்குப்
‘பகல் இரா’ என்று கூறிட்ட காலம் இரண்டும் இந்த விஷயத்திலே அநுபவிக்கப்பெற்ற எனக்கு, இரவு
பகல் புறம்பே விஷயங்களை அனுபவிப்பாருடைய மனோ துக்கம் உண்டோ? பரிவு - துக்கம். அதிலே ஒரு
ஒற்றெழுத்து ஏறினாலும் அந்தப் பொருளையே காட்டக்கடவது.
(6)
592.
மனப்பரிப்போடு அழுக்கு
மானிட சாதியில் தான்பிறந்து
தனக்கு வேண்டுருக்
கொண்டு தான்தன சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய்முடி மாலை
மார்பன்என்னப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன்
எனக்கினியார் நிகர் நீணிலத்தே.
பொ-ரை :- மனத்தில் துக்கத்தோடே தாழ்ந்த மனித வர்க்கத்தில்
தனக்கு வேண்டிய உருவினைக்கொண்டு தான் அவதரித்து, தான் தனது சீற்றத்தினை முடிக்கும்,
புனத்துழாயினை முடியிலே தரித்த மாலை பொருந்திய மார்பினையுடையவனான என் அப்பனுடைய ஆச்சரியமான
செயல்களையே நினைக்கின்ற மனத்தினையுடையேன்; இனி நீண்ட பெரிய உலகத்தில் எனக்கு ஒப்பாவார்
யாவர்?
வி-கு :-
அழுக்கு மானிடச் சாதியில் தனக்கு வேண்டுருக்கொண்டு
தான் மனப்பரிப்போடு பிறந்து என்க. புனம் துழாய்மாலை முடிமார்பன் எனக் கூட்டலுமாம், சீற்றத்தினை
முடிக்கும் என்னப்பன் என்க.
ஈடு :-
ஏழாம்பாட்டு. 2தன்னை அடைந்த அடியார்களைப்
பிரதிகூலர் நலியுமதனைப் பொறுக்கமாட்டாமல் அவதரித்து அவர்களை அழியச்செய்யும் செயல்களை நினைக்கும்
நெஞ்சுடைய எனக்கு பூமியின் நிகர் இல்லை என்கிறார்.
1. “பகல் இரா” என்று விசேடித்ததற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘நாட்டார்’
என்று தொடங்கி. அபிமதவிஷயங்கள் - பெண்கள். ‘கூறிட்ட
காலம்’
என்றது, அபிமதவிஷயங்களுக்குக் கொடுக்கைக்கு உறுப்பாகப் பொருளை
ஈட்டுதற்குப் பகலும்,
அவற்றை அநுபவிக்கைக்கு இரவுமாகப் பிரிக்கப்பட்ட
காலம் என்றபடி.
2. பாசுரம்
முழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|