மனப
மனப் பரிப்போடு
அழுக்கு மானிடசாதியில் தான் பிறந்து - 1நாட்டாரை அழுக்கு உடம்பு கழிக்குமவன்தான்
கண்டீர் அழுக்கு மானிடச் சாதியில் வந்து பிறந்தான்; 2குழந்தை கிணற்றிலே விழுந்தால்
எடுக்க வரும் தாய் நெஞ்சு நொந்து வந்து எடுக்குமாறு போலே, 3‘இவற்றிற்கு உதவப் பெற்றிலோம்’
என்னும் திருவுள்ளத்தில் தளர்த்தியோடேவந்து பிறந்தவனாதலின் ‘மனப் பரிப்போடு பிறந்து’
என்கிறது. குற்றங்களுக்கெல்லாம் எதிர்த்தட்டான தான் பிரகிருதி சம்பந்தம் இல்லாத திவ்ய திருமேனியோடே
கர்ப்பத்தில் வாசம் செய்து அவதரித்தானாதலின் ‘தான்பிறந்து’ என்கிறது. அன்றிக்கே,
4பிறப்பதற்குக் கர்மம்செய்து வைத்தவரும்கூட அருவருக்கும் பிறவியிலே கண்டீர் கர்மத்துக்கு
வசப்படாத தான் பிறந்தது என்பார் ‘தான் பிறந்து’ என்கிறார் என்னுதல். இதற்கு அடி
பரம கிருபை அன்றோ. தனக்கு வேண்டு உருக்கொண்டு - 5பிரகிருதி சம்பந்தமில்லாத திவ்ய
திருமேனியையுடையனாய்க்கொண்டு. அன்றிக்கே, அப்படிப் பிறந்தால் ஒருபடிப் பட்டிருக்கப் பெற்றோமோ!
என்னுதல்.
1. “தான்” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘நாட்டாரை’ என்று
தொடங்கி. ‘நாட்டாரை’ என்றது, ‘இழிவான இந்த உடம்பைக்
கழிக்கவேண்டும்’ என்று இறைவனிடத்தில் வேண்டிக் கொள்ளுகிற
முமுக்ஷுக்களை.
2. “மனப்பரிப்போடு” என்றதற்கு,
திருஷ்டாந்தத்தோடு பாவம்
அருளிச்செய்கிறார் ‘குழந்தை’ என்று தொடங்கி.
கூவத்தில் வீழும் குழவி
யுடன்குதித்தவ்
வாபத்தை நீக்குமந்த
அன்னைபோல் - பாபத்தால்
யான்பிறப்ப னேலுமினி
எந்தை எதிராசன்
தான்பிறக்கும் என்னையுய்ப்ப
தா.
என்பது, ஆர்த்திப் பிரபந்தம்.
9.
3. ‘இவற்றிற்கு’ என்றது,
தனக்கே அடிமையாக இருந்துகொண்டு நோவுபடுகிற
இவற்றுக்கு என்றபடி.
4. “தான்” என்றதற்கு, கர்மத்திற்குக்
கட்டுப்படாதவனான தான் என்று
வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார் ‘பிறப்பதற்கு’ என்று தொடங்கி.
5. “தனக்கு
வேண்டுருக் கொண்டு” என்பதற்கு, இரண்டு விதமாகப் பொருள்
அருளிச்செய்கிறார். ‘பிரகிருதி சம்பந்தமில்லாத
திருமேனியை யுடையனாய்க்
கொண்டு’ என்பது முதற் பொருள். இப்பொருள் தன்னையே ‘பிரகிருதி’
என்று
தொடங்கி அருளிச்செய்கிறார். ‘இரண்டு தோள்களையுடையனாதல்,
நான்கு தோள்களையுடையனாதல்’ வேண்டினபடியாய்க்
கொண்டு என்பது
மற்றொரு பொருள். இதனையே அருளிச்செய்கிறார் ‘அப்படிப் பிறந்தால்’
என்று தொடங்கி.
|