1
1“இரண்டு
தோள்களுடையவனா? நான்குதோள்களுடையவனா?” என்னும்படியன்றோ பட்ட படி. 2ஈசுவரத்
தன்மையைக் கைகழிய விட்ட பின்பு அன்றோ இவனுக்கு இங்கு இடம் கொடுத்தது. இவைதாம் அடியார்களுக்காக
ஆகையாலே தனக்கே விரும்பத் தக்கனவாயிருக்கும். அன்றிக்கே, இச்சையால் எடுத்தவை என்றுமாம்.
தான் தன சீற்றத்தினை
முடிக்கும் - 3அடியார்களுடைய விரோதியைப் போக்கினானாய் இருக்கையன்றிக்கே, தன்
சினம் தீர்ந்தானாய் இருக்கை; தாயானவள், குழந்தையை நலிந்தவர்களைத் தான் நலிந்து தன்சினம்
தீருமாறுபோலே. 4“இராவணனால் உண்டாக்கப்பட்ட புண்களோடு கூடின வானர சிரேஷ்டனான
அநுமாரைப் பார்த்து, பிறகு மஹாபராக்கிரமமுடைய ஸ்ரீ ராமர் கோபத்தின் வசப்பட்டவரானார்” என்பது,
ஸ்ரீ ராமாயணம். புனம் துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன்-அடியார்களுடைய விரோதிகளைப்
போக்கித் திருமஞ்சனம்செய்து ஒப்பித்து, திருமேனியின் பரிசத்தாலே தன்நிலத்தில் நின்றாற்போலே
செவ்விபெற்று இருக்கின்ற திருத்துழாய் மாலையினைத் திருமுடியிலும் திருமார்பிலுமுடையவனாய், அந்த
ஒப்பனையாலே என்னை எழுதிக்கொண்டவன். தன்மாயங்களே நினைக்கும்
1. ஒருபடிப்பட்டிருக்க இல்லையோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இரண்டு தோள்கள்’ என்று தொடங்கி.
“த்விபுஜோ வா
சதுர்புஜோவா” என்பது.
2. நாற்றோளன் இருதோளன்
ஆகைக்குக் காரணம் என்? என்ன,
‘சம்சாரத்தினுடைய கொடுமை’ என்று அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘ஈசுவரத்தன்மை’ என்று தொடங்கி. ‘கை கழியவிட்ட’ என்பதற்கு, கைகளை
கழியவிட்ட என்றும். கை
கழியும்படி விட்ட என்றும் பொருள். இதற்கு
நோக்கு, “உபஸம்ஹர ஸர்வாத்மந் ரூப மேதத்
சதுர்புஜம்-எல்லாருக்கும்
அந்தராத்மாவாக இருப்பவனே! நான்கு தோள்களோடு கூடின இந்த
உருவத்தை
மறைத்துக் கொள்” என்பது. இது, ஸ்ரீவிஷ்ணுபு. 5. 3 : 13.
3. “தன் சீற்றத்தினை”
என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்
‘அடியார்களுடைய’ என்று தொடங்கி. இதற்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார்
‘தாயானவள்’ என்று தொடங்கி.
4. அடியார்களுடைய விரோதிகளைத்
தன் விரோதிகளாக நினைத்துச் சினம்
கொண்டதற்கு மேற்கோள் காட்டுகிறார் ‘இராவணனால்’ என்று
தொடங்கி.
“ததோ ராமோ மஹாதேஜே ராவணேன
க்ருத வ்ரணம்
த்ருஷ்ட்வா ப்லவகசார்தூலம்
கோபஸ்ய வஸமேயிவாந்”
என்பது, ஸ்ரீராமா. யுத். 50
: 136.
|