New Page 2
நெஞ்சுடையேன்-1“மனம்
பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணமாக நிற்கிறது” என்று பொதுவாகையன்றிக்கே, அவனுடைய ஆச்சரியமான
செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சையுடையேன். எனக்கு நீள் நிலத்தில் யார் நிகர்-பூமி பரப்பையுடைத்து
என்னா, எனக்கு ஒப்பாவார் உளரோ? 2பரமபதத்தை ஒன்றாக நினைக்கின்றிலர்; தம்மைப்போலே
கவிபாடி அடிமைசெய்வார் இல்லாமையாலே, சம்சாரத்தே இருந்து கவிபாடி அடிமை செய்யப்பெற்ற எனக்கு,
பூமியில் ஓர் எதிர் உண்டோ? என்கிறார்.
(7)
593.
நீணிலத்தொடு
வான்வியப்ப நிறைபெரும் போர்கள்செய்து
வாண னாயிரம் தோள்துணித்ததும்
உட்பட மற்றும்பல
மாணியாய்நிலம் கொண்டமாயன்
என்னப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன்
எனக்கினி என்ன கலக்க முண்டே?
பொ-ரை :-
பெரிய உலகத்திலேயுள்ள மக்களோடு தெய்வலோகத்திலேயுள்ள
தேவர்களும் கண்டு ஆச்சரியப்படும்படியாக, குறைவில்லாத பெரிய போரைச் செய்து வாணாசுரனுடைய ஆயிரம்
தோள்களைத் துணித்ததும் முதலான மற்றும் பலவான, பிரமசாரியாய் நிலத்தை வாங்கின மாயனாகிய
என்னப்பனுடைய ஆச்சரியம் பொருந்திய செயல்களையே காண்கின்ற நெஞ்சினையுடையேன்; ஆதலால்,
எனக்கு இனி என்ன கலக்கம் இருக்கின்றது?
வி-கு :-
வியப்பப் போர்கள் செய்து துணித்ததும் என்க.
மற்றும் பலவான மாயங்கள் என்க. மாணி - பிரமசாரி.
ஈடு :- எட்டாம்பாட்டு.
3வாணனை வெற்றிகொண்டது முதலான கிருஷ்ணன் செயல்களையே அநுசந்திக்கும் நெஞ்சினையுடைய
எனக்கு ஒரு கலக்கம் இல்லை என்கிறார்.
1. “மாயங்களே” என்ற ஏகாரத்திற்குப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘மனம்’
என்று தொடங்கி. “மநஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:”
என்பது, ஸ்ரீ விஷ்னு புரா. 6. 7 : 28.
2. மேல் “எனக்கு எவ்வுலகம்
நிகர்” என்றாரே? இங்கே, “நிகர் நீள் நிலத்தே”
என்பான் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘பரமபதத்தை’
என்று தொடங்கி.
3. பாசுரம்
முழுதுனையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|