New Page 1
கொண்டு. 1இவர்
அந்த அவதாரத்திலே கால்வாங்குகிறார் அல்லர்; கண்ணழிவற்ற அழகாலும், வரையாதே எல்லாரையும்
தீண்டுகையாலும், அடியார்கள் விஷயத்தில் ஓரத்தாலும், செய்யும் ஆனைத்தொழில்களாலும் கிருஷ்ணாவதாரத்தோடு
ஒத்திருக்கையாலே, ஸ்ரீ வாமனாவதாரத்தை அநுபவிக்கிறார். நிலம் கொண்ட மாயன் என் அப்பன் -
‘திருஉலகு அளக்க’ என்று ஒரு வியாஜத்தை இட்டு அளந்துகொண்டது தம்மை என்று இருக்கிறார். அப்பன்
தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் - 2“‘முடியானே’ என்ற திருவாய்மொழியிற் கூறிய
கரணங்களையுடைய ஆழ்வார் ஆகையாலே, நெஞ்சுதானே நினைக்கவும் வற்றாய்க் காணவும் வற்றாயிருக்கும்
என்று பிள்ளான் பணிப்பர்” என்று அருளிச்செய்வர். அன்றிக்கே, ‘கட்கண்’ என்றும்,
‘உட்கண்’ என்றும் சொல்லுகிறபடியே, நெஞ்சு தன்னையும் கண்ணாகச் சொல்லக்கடவதன்றோ;
அது ஆகவுமாம். எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே - ‘இந்த விஷயத்தைக் காணப்பெற்றிலோம்’ என்கிற
கலக்கம் எனக்கு உண்டோ? அன்றிக்கே, 3வேறு தெய்வங்கள் ‘ரக்ஷகர்’ என்று
இருக்கிற கலக்கமும், ஈசுவரனுடைய ரக்ஷணத்திலே ஐயப்படும் கலக்கமும், ‘தானே தனக்குக் கடவன்’ என்னும்
கலக்கமும் இல்லை என்னலுமாம்.
(8)
594
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை
உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு
சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச்
சங்கம் இவையுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு
மாறுளதோ இம்மண்ணின் மிசையே?
1. கிருஷ்ணாவதாரத்திலே
மூழ்கிப் பேசுகிற இவர் வாமனாவதாரத்தைப்
பேசுவான் என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இவர்’ என்று
தொடங்கி.
2. நெஞ்சாலே காணக் கூடுமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘முடியானே’ என்று தொடங்கி.
“கட்கண்ணால் காணாத அவ்வுருவை
நெஞ்சென்னும்
உட்கண்ணேல் காணும்
உணர்ந்து”
(பெரிய திருவந். 28.)
என்பது, ஈண்டு அநுசந்தேயம்.
3. இங்குக்
கூறுகின்ற கலக்கங்கள் மூன்றனுள், முன்னே கூறிய இரண்டு
கலக்கமும் வாணாசுரனைப் பற்றியன; மூன்றாவதாகக்
கூறிய கலக்கம்
மஹாபலியைப் பற்றியது.
|