முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
21

    ஈடு :- மூன்றாம்பாட்டு. 1திறம் திறமாகச் சஞ்சரிக்கின்ற புள்ளினங்களைக் கண்டு, என் வியசனத்தை அறிவியுங்கோள் என்கிறாள்.

    திறங்களாகி - கூட்டம் கூட்டமாக. இவை, திரள் திரளாகத் திரிதல் நம் காரியம் செய்து தலைக்கட்ட என்றிருக்கிறாள். 2“வாயுந் திரையுகளும்” என்ற திருவாய்மொழியில் வாசனையாலே, தன் துன்பம் கண்டு பொறுக்கமாட்டாமல் படுகின்றனவாகக்கொண்டு நினைத்திருக்கிறாள். 3அங்கு, தாம்தாம் விரும்பிய பொருள் பெறாமையாலே நோவுபடுகின்றன என்று இருந்தாள்; இங்கு, தன் இழவு கண்டு பொறுக்கமாட்டாமையாலே நோவுபடுகின்றன என்று இருக்கிறாள். இங்ஙன் கூடுமோ? என்னில், “இவை பறவைகள், நம் காரியம் செய்து தலைக்கட்டமாட்டா” என்னும் அறிவு இன்றிக்கே ஒழிந்த பின்பு, இதுவும் கூடத் தட்டு இல்லை. திறங்களாகி எங்கும் - 4பிராட்டியைப் பிரிந்து பெருமாள் நோவுபடுகிற சமயத்திலே முதலிகள் அடங்கலும் நாலு திக்குகளிலும் புகுந்து அங்கும் இங்கும் திரிந்தாற் போலே காணும் இவையும் திரிகிறபடி, 5தேடினால் காண்கைக்குச் சம்பாவனை இல்லாத இடமெங்கும் புக்குத் தேடா

 

1. “திறங்களாகி உழல் புள்ளினங்காள்! அடியேன் இடரைப் பணியீர்”
   என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. இரைதேடித் திரிகின்றனவற்றைத் ‘தன்காரியம் செய்து முடிப்பதற்காகத்
  திரள இருக்கின்றன’ என்று நினைத்திருப்பதற்குக் காரணம் யாது? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் “வாயும் திரையுகளும்” என்று
  தொடங்கி.

3. ஆயின், அதற்கும் இதற்கும் வாசி இல்லையோ? எனின், அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘அங்கு’ என்று தொடங்கி. இதனால், இரண்டு
  இடங்களிலும் வாசி உண்டேயாகிலும், பிரமிக்கின்ற தன்மை ஒக்கும்
  என்றபடி. ‘இங்ஙன் கூடுமோ?’ என்றது, தன்காரியம் செய்யச்
  சஞ்சரிக்கின்றனவாக நினைக்கக்கூடுமோ என்னில்? என்றபடி.

  “நோயும் இன்பமும் இருவகை நிலையும்”

  என்னும் தொல்காப்பியச் சூத்திரம் இங்கு நோக்கல் தகும்.

(பொருளதி. 196. சூ.)

4. “திறம்”, “எங்கும்” என்ற பதங்களின் பொருளினைத் திருஷ்டாந்தம்
   காட்டி விளக்குகிறார் ‘பிராட்டியை’ என்று தொடங்கி.

5. “எங்கும்” என்ற சொல்லின் பொருள் முடிவின் எல்லையைக் காட்டுகிறார்
  ‘தேடினால்’ என்று தொடங்கி. இப்படித் தேடின பேர் உளரோ? என்ன,
  ‘சுயம்பிரபை’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
  சுயம்பிரபை - மேரு சாவர்ணியினுடைய பெண். முதலிகள் - வானரவீரர்கள்.