அன
அன்றிக்கே, ‘ஒப்பு உண்டு,
இல்லை’ என்று ஐயங்கொள்ளுகைக்குத் தான் விஷயமுள்ளது நித்திய விபூதியிலே யன்றோ? ஆதலால்,
‘இம் மண்ணின்மிசை மாறுளதோ?’ என்கிறார் என்னுதல்.
(9)
595
மண்மிசைப் பெரும்பாரம்
நீங்க ஓர்பாரத மாபெரும்போர்
பண்ணிமாயங்கள் செய்துசேனையைப்
பாழ்படநூற் றிட்டுப்போய்
விண்மிசைத் தன தாமமே
புக மேவிய சோதிதன்தாள்
நண்ணி நான்வணங்கப்
பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே?
பொ-ரை :- பூமியின்மேலே பெரிய பாரம் நீங்கும்படி ஒப்பற்ற
மிகப் பெரிய பாரதமாகிய போரைச்செய்து ஆச்சரியமான காரியங்களைச் செய்து சேனைகள் பாழ்படும்படியாக
மந்திரித்துப் போய்ப் பரமாகாசமான தன்னுடைய வைகுண்டலோகத்தைச் சென்று அடைந்த பரஞ்சோதியினுடைய
திருவடிகளைச் சேர்ந்து நான் வணங்கப்பெற்றேன்; எனக்குத் தலைவர் வேறுயாவர் உளர்?
வி-கு :-
நீங்கப் பண்ணிச் செய்து நூற்றிட்டுப்
போய்த் தனதாமமே மேவிய சோதி என்க. நூற்றிட்டு - சாம்பலாக்கி என்னலுமாம். நூறுதல் -
கொல்லுதல்.
ஈடு :- பத்தாம்பாட்டு.
1அபாயங்களே மிகுதியாகவுடைய சம்சாரத்திலே வந்து அவதரித்து யாதொரு அபாயமும் இல்லாமல்
பரமபதத்திற் போய்ப் புக்க படியை அனுபவிக்கப்பெற்ற எனக்கு வேறே சிலர் நிர்வாஹகர் வேண்டும்படி
குறையுடையவனோ நான்? என்கிறார்.
மண்மிசைப் பெரும்
பாரம் நீங்க - 3‘விஸ்வம்பரை’ என்றும், ‘க்ஷமை, பொறை’ என்றும் பெயர்களையுடைத்தாய்த்
தாங்கக்கூடிய தான பூமியாலும் பொறுக்க ஒண்ணாதபடி அன்றோ துர்வர்க்கம்
என்கிறார் என்பது. ‘எதிர் உண்டு,
இல்லை’ என்று சங்கிக்கைக்கு விஷயம்
பரமபதத்தில் உண்டானால் உண்டித்தனை ஒழிய, இங்கு இல்லை
என்கிறார்
என்பது இரண்டாவது கருத்து.
1. “போய் விண் மிசைத்
தன தாமம்” என்பது போன்றவைகளையும், “நண்ணி
நான்” என்பது போன்றவைகளையும் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2.
“பெரும்பாரம்” என்று விசேடித்ததற்குக் கருத்து அருளிச்செய்கிறார்
‘விஸ்வம்பரை’ என்று தொடங்கி.
விஸ்வம்பரை - எல்லாவற்றையும்
தாங்குவது; பூமி.
|