முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
214

யவனன

யவனன், ஜராசந்தன் தொடக்கமானாரைப்போலே, எதிரிட்டுக் கிட்டு கை அன்றிக்கே, முறையாலே கிட்டப்பெற்றேன். எனக்கு நாயகர் பிறர் ஆர் - 1அவனுடைய அவதாரம் தொடக்கமாக, நடுவுள்ள அபாயங்களைத் தப்பி அடியார்களை வாழ்வித்துத் தனக்கு அமர்ந்த நிலத்தேபோய்ப் புக்கபடி யளவும் அநுபவிக்கப்பெற்ற எனக்கு ஆர் தான் நியமிக்கின்றவர்கள் என்கிறார். 2“பயிலும் திருவுடையார்யவரேலும்” என்றதனை மறந்தார்போலே இருந்தது. அன்றிக்கே, அவர்களைப் பிறராக நினையாரே யன்றோ என்னலுமாம்.

(10)

596.

        நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
        வாயகம்புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
        கேசவன் அடியிணைமிசைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன
        தூய ஆயிரத் திப்பத்தால் பத்த ராவர் துவளின்றியே.

   
பொ-ரை :- எல்லா உலகங்கட்கும் நாயகனாய், எல்லா உலகங்களையும் பிரளயகாலத்தில் தன் வயிற்றினுள் வைத்துப் பிரளயம் நீங்கினவுடனே அவற்றை உமிழ்ந்தவனாய், சராசரங்கள் அனைத்துமாய், அவற்றின் தோஷங்கள் ஒன்றும் தன்பக்கல் தட்டாதவனுமாய் இருக்கின்ற கண்ணபிரானுடைய திருவடிகளின்மேலே, திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட பரிசுத்தமான ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களால் குற்றமின்றிப் பக்தர் ஆவார்கள்.

    வி-கு :- வாயகம் - வாயிடம். புகவைத்தல் - செலுத்தல்; உண்டு என்றபடி, தூய - பரிசுத்தமான. துவள் - குற்றம்.

 

1. “எனக்குப் பிறர் ஆர் நாயகர்” என்று கூட்டிப் பொருள் அருளிச்
  செய்கிறார் ‘அவனுடைய’ என்று தொடங்கி.

2. பாகவதர்கள், தமக்கு நாயகராக இருக்க, இங்ஙனே சொல்லலாமோ? என்ன,
  அதற்கு இரண்டு வகையாக விடை அருளிச்செய்கிறார் ‘பயிலும்’ என்று
  தொடங்கியும், ‘அவர்களை’ என்று தொடங்கியும். என்றது, இவ்வநுபவத்தால்
  உண்டான பிரீதியின் மிகுதியாலே “பயிலும் சுடர்” என்ற
  திருவாய்மொயிழிற் கூறியதனை மறந்தார் என்பது ஒன்று. பாகவதர்களைச்
  சர்வேசுவரனைப்போன்று நினைத்திருக்குமது ஒழிய, வேறாக
  நினையாராகையாலே, இங்குப் “பிறர்” என்றது, பாகவதர்களை அன்று;
  வேறுபட்ட மற்றையோரை என்பது இரண்டாவது.