1
1“ஆசசக்ஷேத
ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய மஹாத்மந:” என்று இளையபெருமாள் படியை ஸ்ரீ பரதாழ்வானுக்கு ஸ்ரீ குகப்பெருமாளன்றோ
சொல்லுகிறார். ஆசசக்ஷே - வாக்கு இந்திரியத்திற்கு நில மல்லாததையும் சொல்லலாமாகாதே. அத -
ஸ்ரீ பரதாழ்வான் தன்மை அறிந்தபின்பு. ஸத்பாவம் - 2“இளமைப் பருவம் தொடங்கியே
அதிக அன்புள்ளவராயிருந்தார்” என்றும், 3“பரதந்திரனாக இருக்கிறேன்” என்றும்
4சத்தையோடு கூடியதாயிருக்கின்ற தன்மையைச் சொன்னான். லக்ஷ்மணஸ்ய மஹாத்மந: -
கடலைக் கையாலே இறைக்கத் தொடங்கினான். பரதாய அப்ரமேயாய - ‘இன்னார் இன்னார்க்கு உபதேசிக்க’
என்று இல்லை ஆகாதே. குஹோ கஹந கோசர: காட்டில் மரங்களின் வாசி அறியுமவர் இவர்கள்நிலை அறியும்படி
நிலவரானார். அன்றிக்கே, இராம விரஹத்தாலே ஒரு தூற்றடியிலே கிடந்தவன், தேசிகரைப் பெற்றவாறே
தலையெடுத்துப் புறப்பட்டான் என்னலுமாம்.
597.
துவளில்மாமணி மாடமோங்கு
5தொலைவில்லி மங்க லம்தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்!
உமக் காசை இல்லைவிடுமினோ;
தவள ஒண்சங்கு சக்கரமென்றும்
தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண்மலர்க் கண்கள்
நீர்மல்க நின்று நின்று குமுறுமே.
1. இந்த அர்த்தத்துக்கு
அநுஷ்டானம் காட்டுகிறார் “ஆசசக்ஷே” என்று
தொடங்கி.
“ஆசசக்ஷேத ஸத்பாவம் லக்ஷ்மணஸ்ய
மஹாத்மந:
பரதாய அப்ரமேயாய
குஹோ கஹன கோசர:”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 86 :
1. சுலோகத்திற்குப் பொருள் அருளிச்
செய்கிறார் ‘வாக்கு இந்திரியத்திற்கு’ என்று தொடங்கி.
“மஹாத்மந:”
என்கையாலே, நிலமல்லாமை தோற்றுகிறது. ‘சொல்லலாமாகாதே’ என்றது,
சிறிது
சொன்னான் என்றபடி.
2. “பால்யாத் ப்ரப்ருதி
ஸுஸ்நிக்தோ லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:
ராமஸ்ய லோகராமஸ்ய
ப்ராதுர் ஜ்யேஷ்ட நித்யஸ:”
என்பது, ஸ்ரீராமா. பால. 18, 27.
3. “பரவாநஸ்மி காகுத்ஸ்த
த்வயி வர்ஷஸதம் ஸ்திதே”
என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.
4. ‘சத்தையோடு கூடியதாயிருக்கின்ற
தன்மையை’ என்றது, பெருமாள் பக்கல்
பிரேமத்தையும், பாரதந்தரியத்தையும் குறித்தபடி.
5. “துலைவில்லிமங்கலம்”
என்ற பாடமும் உண்டு. துலைவில்லி - ஒப்பு
இல்லாதது; துலைவு - ஒப்பு. “தோல்வி, துலைவில்லார்
கண்ணும் கொளல்”
என்பது, திருக்குறள்.
|