ஒண
ஒண்மலர் கண்கள் நீர்மல்க
- 1இந்தக் கண்களைக்கண்டால் தாமரைத் தடங்கண்கள் அன்றோ நீர்மல்க அடுப்பது?
2கண்ணும் கண்ணீருமாய் இவள் இருக்கிற இருப்பைக் கண்டுகொண்டு இருக்க அன்றோ உங்களுக்கு
அடுப்பது? 3“பகவத் அநுபவத்தால் உண்டான சந்தோஷத்தாலே குளிர்ந்தகண்ணீரையுடையவனாய்,
மயிர்கூச்சு எறிகின்ற சரீரத்தையுடையவனாய், பரமாத்மாவின் குணங்களால் எப்போதும் ஆவேசமடைந்தவனாய்,
மக்களால் பார்க்கத்தகுந்தவனாய் இருப்பான் ஞானி” என்பது விஷ்ணுதத்வம். இதனால், எப்பொழுதும்
தரிசனம் செய்துகொண்டு இருப்பதற்கு ஒருதேசம் தேடிப்போக வேண்டாகாணும் என்பதனைத் தெரிவித்தபடி.
குவளைப்பூப்போலே அழகிய கண்கள் நீர்மல்க. 4அவள் தன்னுடைய பெண் தன்மையைக்
காற்கடைக்கொள்ள, நீங்கள் எங்ஙனே மீட்கப் பார்க்கும்படி? கண்ணநீர் பாய்கையாவது, பெண்தன்மை
அழிதலே அன்றோ. நின்று நின்று குமுறும் - 5பேச்சுப்போய்க் கண்ணநீராய், கண்ணநீர்போய்த்
தடுமாறுகிறநிலையிலே மீட்கப்போமோ?
6இராஜகோஷ்டியிலே
“உகும், இறும்” என்று சிலர்பொருள் சொல்ல, விக்கிரமசிங்கன் என்பான் ஒருவன், ‘அங்ஙன்
அன்று,
1. “குவளை ஒண்மலர்” என்று
விசேடித்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘இந்தக் கண்களை’ என்று தொடங்கி.
2. மேலே அருளிச்செய்த
அவதாரிகை இரண்டனுள் முதல்
அவதாரிகைக்குச்சேர, பாவம் அருளிச்செய்கிறார் ‘கண்ணும் கண்ணீருமாய்’
என்று தொடங்கி.
3. தலைவி நிற்கிற நிலை
கவர்ச்சிகரமாக இருக்கும் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘பகவத் அநுபவத்தால்’ என்று தொடங்கி.
“ஆஹ்லாத சீத நேத்ராம்பு:
புளகீக்ருத காத்ரவான்
ஸதா பரகுணாவிஷ்டோ த்ரஷ்டவ்ய:
ஸர்வதேஹிபி:”
என்பது, ஸ்ரீ விஷ்ணு தத்வம். இந்தச்
சுலோகத்திற்கு, பாவம் அருளிச்
செய்கிறார் ‘எப்பொழுதும்’ என்று தொடங்கி.
4. இரண்டாம் அவதாரிகைக்குச்
சேர, பாவம் அருளிச்செய்கிறார் ‘அவள்
தன்னுடைய’ என்று தொடங்கி. காற்கடைக் கொண்டபடி
யாங்ஙனம்? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கண்ணநீர்’ என்று தொடங்கி.
5. “நின்று நின்று’ என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘பேச்சுப்போய்’
என்று தொடங்கி.
6. தடுமாறுகிற
நிலைக்குச் சம்வாதம் காட்டுகிறார் ‘இராஜ கோஷ்டியிலே’
என்று தொடங்கி.
|