கன
கன்றைக் கடக்கக் கட்டிவைத்தால்
முலைக்கண் கடுத்துப் பசு அலமந்து படுமாறுபோலே, உள்ளோடுகிற கிலேசம் வாய்விடமாட்டாதே நோவுபடுகிற
இவளுக்கு இது வார்த்தையோ?’ என்றான். 1பெருவெள்ளத்தில் சுழிக்குமாறுபோலே, அகவாயில்
உள்ளது வெளியிடமாட்டாள்; உள்ளே நின்று சுழிக்கிறபடி.
தொலை வில்லிமங்கலம்
தொழும்’ என்கையாலே, சரீரத்தின் செயல் சொல்லிற்று; ‘தவள ஒண்சங்கு சக்கரம் என்றும், தாமரைத்
தடங்கண் என்றும்’ என்று சொல்லுகையாலே, வாக்கின் செயல் சொல்லிற்று; ‘குமுறும்’ என்கையாலே,
மனத்தின்செயல் சொல்லிற்று.
(1)
598.
குமுறுமோசை விழவொலித்
தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு
அமுத மென்மொழி
யாளை நீர்உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர்கொ டாலொத்து
நிற்கும் மற்றிவள் தேவ தேவபி ரான்என்றே
நிமியும் வாயொடு கண்கள்
நீர்மல்க நெக்கொ சிந்து கரையுமே.
பொ-ரை :-
ஒலிக்கின்ற ஒசையையுடைய திருவிழாவின் ஒலி
பொருந்திய திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்வியதேசத்திற்குக்கொண்டு சென்று, அமுதம்
போன்ற இனிய மெல்லிய சொற்களையுடைய இவளை உங்களுக்கு ஆசையில்லாமல் அகலும்படி நீங்கள் செய்தீர்கோள்;
இவள், திமிர் கொண்டாற் போன்று நிற்கிறாள்; தேவ தேவபிரான் என்றே நெளிகின்ற வாயோடு
கண்களில் நீர்பெருகி நிற்கும் படியாகக் கட்டுக் குலைந்து தளர்ந்து கரையாநிற்கின்றாள்.
வி-கு :-
ஓசைவேறு, ஒலிவேறு; “ஓசை ஒலியெலாம் ஆனாய்
நீயே” என்பது தேவாரம். கொண்டுபுக்கு அகற்றினீர் என்க, நிமிதல் - நெளிதல்.
ஈடு :-
இரண்டாம்பாட்டு. 2அவ்வூரில் கொடுபுக வேண்டினால்,
திருநாளிலே கொடுபுகுவார் உளரோ? என்கிறாள்.
1. குமுறுகையாவது யாது? என்ன,
அதனை விளக்குகிறார் ‘பெருவெள்ளத்திலே’
என்று தொடங்கி. குமுறும்-உள்ளே நின்று சுழியா நிற்கும்.
2. “குமுறும்
ஓசை விழவொலி” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
|