New Page 1
குமுறும் ஓசை விழவு
ஒலித் தொலை வில்லிமங்கலம் கொண்டு புக்கு - 1“பின்பு அந்தப் பிராமணர்களுடைய
கம்பீரமாயும் மதுரமாயுமிருக்கிற சப்தத்தையுடையதும் தூரியம் என்னும் வாத்தியத்தின் ஒலியோடு
கூடியதுமான புண்யாகவாசன சப்தமானது அயோத்தியா நகரம் முழுவதும் பரந்தது” என்கிறபடியே, ஓத்துச்சொல்லுவார்,
சங்கீர்த்தனம் பண்ணுவார், பாடுவார், இயல் விண்ணப்பம் செய்வாராய், எழுத்தும் சொல்லும்
பொருளும் தெரியாதபடி விரவிக்கொண்டு எழுகின்ற ஒலியையுடைய திருநாளில் ஆரவாரம். 2பாவியேன்!
இந்த ஒலி செவிப்பட்டால் கொண்டு மீள அன்றோ அடுப்பது! ‘இவ்விடம் பிள்ளை கொல்லி’
என்று கூப்பிடுமாறுபோலே காணும் ஒலி இருக்கிறது. 3அவ் வூரும் திருநாளும் அங்குள்ளார்
படுகிறதும் கண்டுவைத்து இவளைக்கொண்டு புகுவார் உளரோ? கொண்டு புக்கு - இவள் அறியாதிருக்க நீங்களே
கொண்டுபுக்கு. அமுதமென் மொழியாளை - இவள்மொழி, கேட்டார்க்கு அழியாத தன்மையைக்
கொடுக்குமே! இந்த இனிய பேச்சைக்கேளாதபடி புண்ணியம்
1. குமுறும் ஓசை உண்டாகைக்குக்
காரணம் யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘பின்பு’ என்று தொடங்கி.
“தேஷாம் புண்யாஹ
கோஷோத கம்பீர மதுரஸ்வந:
அயோத்யாம் பூரயாமாஸ
துர்யநாதாநுநாதித:”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 8.
“குமுறும்” என்றதற்குப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘எழுத்தும்’ என்று
தொடங்கி.
2. “கொண்டுபுக்கு” என்றதற்குக்
கருத்து அருளிச்செய்கிறார் ‘பாவியேன்’
என்று தொடங்கி. “குமுறும் ஒலி” என்றதற்குக் கருத்து
அருளிச்செய்கிறார்
‘இவ்விடம்’ என்று தொடங்கி.
3. “குமுறும் ஓசை விழவொலித்
தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு”
என்னுமளவும் பலித்த பாவத்தை அருளிச்செய்கிறார்
‘அவ்வூரும்’ என்று
தொடங்கி.
4. அமுதத்துக்கு,
அழியாத தன்மையைக் கொடுத்தல், இனிமையாக விருத்தல்
என்னும் இரண்டு தன்மையும் உளவாதலின்,
அவ்விரண்டினையும்
திருவுளத்தே கொண்டு “அமுதமென்மொழியாள்” என்பதற்கு இரண்டு
வகையாகக் கருத்து
அருளிச்செய்கிறார் ‘இவள்மொழி’ என்று தொடங்கி.
திருவாய்மொழியினைக் கேட்டார்க்கு மீண்டும்
வருதல் இல்லாத உலகம்
உண்டாம் என்பது மேல் வாக்கியத்திற்குச் சுவாபதேசம்.
|