முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
231

என

என்றே - 1இங்கே கண்டாலும் அயர்வறும் அமரர்கள் அதிபதி இங்கே வந்து சுலபனானான் என்றாயிற்று இவள் புத்திபண்ணுவது. 2நாயகனுடைய மேன்மைக்குத் தோற்று வார்த்தை சொல்லுகிற இவளை மீட்கப்போமோ? என்றே நிமியும் - ‘அப்பெரியவன் இப்படிச் சுலபனாய்ச் சீலவானாவதே!’ என்று அந்தச் சீலகுணத்தைச் சொல்லப்புக்குத் தலைக்கட்டமாட்டாதே, உதடு நெளிக்கும். நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க-உதடு நெளிக்கிற வாயோடே கண்கள் நீர் மல்க. நெக்கு - கட்டுக்குலைந்தவளுமாய். ஒசிந்து - பரவசப்பட்டவளாய். கரையும் - நீராகாநின்றாள். நெக்கு ஒசிந்து கரையும்-3பெருவெள்ளத்தில் கரையானது நெகிழ்ந்து ஒட்டுவிட்டு ஒசிந்து பொசிந்து அவயவி ஆகாதபடி கரைந்துபோமாறுபோலே, ஓர் அவயவியாக்கிக் காண ஒண்ணாதபடி கரைந்து போகாநின்றாள்.

(2)

599.

கரைகொள் பைம்பொழில் தண்பணைத் தொலை வில்லி மங்கலம்
                                         [கொண்டுபுக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர்உமக் காசையின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்த தும்திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர்மல்க நிற்குமே.

   
பொ-ரை :- தாமிரபரணி ஆற்றின்கரையைத் தன்னகப்படுத்திக் கொண்டிருக்கிற பசுமைநிறம்பொருந்திய சோலைகளாற் சூழப்பட்ட குளிர்ந்த மருத நிலங்களையுடைய திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்திலே கொண்டுபுக்கு, உலகத்தாரால் கொண்டாடப்படுகின்ற இனிய சொற்களையுடைய இவளை நீங்கள் உங்களுக்கு ஆசையில்லாமல் அகற்றிவிட்டீர்கள்; அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சயனித்திருப்பதையும் திசைகளோடு கூடிய உலகத்தை எல்லாம் தாவி அளந்ததையும் பசுக்களை மேய்த்ததையும் ஆகிய இவைகளையே பிதற்றிக்கொண்டு பெரிய கண்களிலே நீர்பெருக்கு எடுக்கும்படி நிற்கின்றாள்.

 

1. நம்முடைய புத்திக்கு அதீனப்பட்டவனாய் இருக்கிற இவனைத் “தேவ
  தேவபிரான்” என்கிறது என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘இங்கே கண்டாலும்’ என்று தொடங்கி.

2. “தேவதேவபிரான்” என்கிறவருனைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்
  ‘நாயகனுடைய’ என்று தொடங்கி.

3. “நெக்கு, ஒசிந்து, கரையும்” என்ற மூன்றனையும் திருஷ்டார்தத்திலே
  காட்டுகிறார் ‘பெரு வெள்ளத்தில்’ என்று தொடங்கி.