600
600.
நிற்கும் நான்மறை
வாணர் வாழ்தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவு
றாள்மலிந் தாள்கண் டீர்இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம்
கருங்கடல் வண்ணன் கண்ணபி ரான்என்றே
ஒற்கம் ஒன்றும் இலள்
உகந்துகந்து உண்மகிழ்ந்து குழையுமே.
பொ-ரை :-
நித்தியமான நான்கு வேதங்களிலும் வல்லவர்களான
அந்தணர்கள் வாழ்கின்ற திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தைப் பார்த்த
பின்னர் இவள் அடக்கம் என்னுமது ஒன்றனை அடியோடு விட்டாள்; நம்மை மீறினாள்; தாய்மார்களே!
கற்கப்படுகின்ற கல்வி முழுதும் கரிய கடல்போன்ற நிறத்தையுடையவனான கண்ணபிரான் என்று
சொல்லிக்கொண்டே தளர்ச்சி சிறிதும் இல்லாதவளாயிருக்கின்றாள்; மகிழ்ந்து மகிழ்ந்து மனம்
களித்துக் குழையாநின்றாள்.
வி-கு :-
அன்னைமீர்! இவள் தொலைவில்லி மங்கலம் கண்டபின் அறவுறாள் மலிந்தாள் என்க. அற்கம் -
அடக்கம். ஒற்கம் - தளர்ச்சி.
ஈடு :-
நான்காம் பாட்டு. 1அந்த ஊரினையும் அங்குள்ள
ஸ்ரீ வைஷ்ணவர்களையும் யாதொருநாள் கண்டாள், அன்று தொடங்கித் தடைநிற்கை தவிர்ந்தாள் என்கிறாள்.
நிற்கும் நான்மறை-நித்தியமான
நான்கு வேதங்கள். 2நித்தியத்வமாவது, பூர்வ பூர்வ உச்சாரண கிரமத்தைப் பற்ற உத்தர
உத்தர உச்சார்யமாணத்வம். ஆகையாலே, நித்தியமான வேதம். புருஷனாலே செய்யப்படாதது ஆகையாலே
குற்றமற்ற தாயிருக்குமன்றோ. வாணர் - வியாசபதம் செலுத்தவல்லராயிருப்பவர்கள். வாழ் - வேதப்
பொருளாய் விளங்குமவனைக் கண்ணாலே கண்டு வாழாநிற்பர்கள். வாழ் தொலைவில்லி மங்கலம் - வேததாத்பரியனானவனைக்கண்டு
1. முதல் இரண்டு அடிகளைக்
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. ஒலி மூன்றுகணநேரமே
நிற்கக் கூடியதாக இருக்க, நித்தியமாக இருத்தல்
கூடுமோ? என்ன, ஆநுபூர்வீநித்யத்வமே நித்தியத்வம்
என்கிறார்
‘நித்தியத்வமாவது’ என்று தொடங்கி, ஆநுபூர்வீநித்யத்வமாவது, ஆசிரியன்
முன்னே உச்சரிக்க,
அதனைக் கேட்டுப் பின்னே ஓதுகின்றவர்கள்
உச்சரிக்கிறமுறை தப்பாமல் வருதல். நித்தியத்வத்தால்
பலித்த
பொருளைஅருளிச் செய்கிறார் ‘புருஷனாலே’ என்று தொடங்கி.
|