New Page 1
சொல்லா நின்றால்
இளைப்பு ஒன்றும் இன்றிக்கே இராநின்றாள் என்பாள். ‘என்றே ஒற்கம் ஒன்றும் இலள்’
என்கிறாள். 1‘விரஹத்தால் வலியற்று இருத்தலாலே திருநாமத்தை முட்டச்சொல்லமாட்டாள்’
என்று இராநிற்கச்செய்தே, வருத்தம் அறச்சொல்லாநின்றாள். 2திருநாமந்தான் தரிப்பினைக்
கொடுத்துச்சொல்லுவிக்கும்போலே காணும்; 3“பாடி இளைப்பிலம்” என்றாரே யன்றோ
முன்னம். ஒற்கம் - மிடி. என்றது, இளைப்பின்றிக்கே என்னுதல்; அன்றிக்கே, ஒற்கமாவது, ஒடுக்கமாய்,
தாய்மார் முன்பே ‘இப்படிச் சொல்லாநின்றோமே’ என்னும் நாணம் இன்றிக்கே என்னுதல். உகந்து
உகந்து - திருநாமங்களைச் சொல்லுதல் மூலமாக அவனுடைய அழகு சீலம் முதலிய குணங்களை நினைத்து மேன்மேல்
எனப் பிரீதியுடையவள் ஆகாநின்றாள். உள்மகிழ்ந்து குழையும் - மனத்திலே உண்டான பிரீதியின்
மிகுதியாலே உடல் அழியாநிற்பாள்.
(4)
601.
குழையும் வாண்முகத் தேழையைத்
தொலை வில்லி மங்கலம் கொண்டு
புக்கு
இழைகொள் சோதிச்
செந்தாமரைக்கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழைபெய்தால் ஒக்கும்
கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள்
அன்னை மீர்தொழும் அத்திசை4உற்று நோக்கியே.
பொ-ரை :-
தாய்மார்களே! வருந்துகின்ற ஒளிபொருந்திய
முகத்தையுடைய ஏழையாகிய இவளைத் திருத்தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு, வேறு ஆபரணம் வேண்டாமல்
தானே ஆபரணமாக விளங்குகின்ற பிரகாசத்தையுடைய செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடைய பிரான்
வீற்றிருத்தலைக் காட்டினீர்கள்; அன்று தொடங்கி மயங்கி மழைபெய்தாற்போலே
1. இளைப்புக்குக் காரணம்
யாது? என்ன, ‘விரஹத்தால்’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
2. வருத்தம் அறச்
சொல்லுகைக்குக் காரணம் யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘திருநாமந்தான்’ என்று
தொடங்கி.
3. திருநாமம் தரிப்பினைக்
கொடுப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘பாடி
இளைப்பிலம்’ என்று. இது, திருவாய்மொழி, 1. 7
: 10.
4. “துன்பமொரு முடிவில்லைத்
திசைநோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான்
பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான்”
என்றார் கம்பநாட்டாழ்வார்.
|