க
கால் நம்பி
பக்கல் எம்பெருமானைக் கேட்டவுடனே, “உபாயம்
இதற்குமேல் இல்லை; இவ்விஷயத்தை இப்போதே நேரே காண்டற்கு விரகு இல்லையோ?” என்றாராம்.
அப்படிக் கண்டவுடனே கண்ணநீர் வெள்ளமிடப்புகுந்த தத்தனை. ‘ஏழை’ என்ற இடத்தை மூதலிக்கிறாள்:
அன்று தொட்டும் - நீங்கள் காட்டின அன்று தொடங்கி. மையாந்து - மயங்கி. ‘குழையும்’
என்ற இடத்தை மூதலிக்கிறாள்: இவள் நுழையும் சிந்தையள் - 1அவன் குணங்களிலே உட்புகாநின்ற
நெஞ்சினையுடையள். சொரூபத்தையும் ஆத்ம குணத்தையும் ஒழிய வடிவழகிலே இடம்கொள்ளாநின்றாள்.
2அங்கே சுழித்து நின்று, ‘இது ஒரு வடிவழகே! இது ஓர் ஒப்பனையே! இது ஒரு கண்ணழகே!’
என்று இடம் கொள்ளாநின்றாள் அன்னை மீர் - 3இவளை மீட்கப் பார்க்கிற அளவே
அன்றோ உங்களது. தொழும் - 4“ஒரே இடத்தில் நிறுத்திய மனத்தையுடையவளாய் ஸ்ரீ ராமபிரானையே
நிச்சயமாகப் பார்க்கிறாள்” என்கிறபடியே, அந்தத் திக்கை மறுபாடு உருவப் பார்த்துத் தொழாநிற்கும்.
இவள் தொழிலும் ஒரு 5திக்குப்பட்டல்லது இராது காணும்.
(5)
1. “இருந்தமை” என்றதற்கு
அருளிச்செய்த இருவகைப் பொருள்களுள்,
‘தன்மை’ என்ற பொருளைக் கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார்
‘அவன் குணங்களிலே’ என்று தொடங்கி. ‘அழகு’ என்ற பொருளைக்
கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார்
‘சொரூபத்தையும்’ என்று தொடங்கி.
2. இடம் கொள்ளும் பிரகாரத்தைக்
காட்டுகிறார் ‘அங்கே சுழித்து’ என்று
தொடங்கி.
3. ‘இவளை மீட்கப்
பார்க்கிற’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,
இவளுடைய பாவபந்தத்தை அறியாதே
‘இவளை மீட்கப் பார்க்கிற அளவே
அன்றோ உங்களது’ என்பது.
4. “அத்திசை யுற்றுநோக்கித்
தொழும்” என்று கூட்டிப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘ஓரே இடத்தில்’ என்று தொடங்கி.
“ந ஏஷா பஸ்யதி ராக்ஷஸ்ய:
ந இமாந் புஷ்பபல த்ருமாந்
ஏகஸ்த ஹ்ருதயா நூநம் ராமம்
ஏவ அநுபஸ்யதி”
என்பது, ஸ்ரீராமா. சுந் 16 : 25.
5.
‘திக்குப்பட்டல்லது’ என்பதற்கு, அடைவுபட்டல்லது என்றும்,
திக்கையுடைத்தல்லது என்றும்
இருபொருள்.
|